கொரோனா பரிசோதனை மையங்களில் டோக்கன் சிஸ்டம் – அதிகாரிகள் யோசனை

கொரோனா பரிசோதனை மையங்களில் டோக்கன் சிஸ்டம் – அதிகாரிகள் யோசனை

ஈரோட்டில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டோக்கன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் அக்ரஹாரம், சூரம்பட்டி வலசு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா பரிசோதனை மையங்களில் டோக்கன் சிஸ்டம் – அதிகாரிகள் யோசனை

முன்பு நாள்தோறும் 500 பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில், தற்போது தொற்று அதிகமாகி வருவதால் பரிசோதனை செய்துகொள்ள வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதனால் பி.சி.ஆர்., மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, டோக்கன் வழங்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை பெற்று, பிறகு டேக்கன் நடைமுறையை அறிமுகம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா பரிசோதனை மையங்களில் டோக்கன் சிஸ்டம் – அதிகாரிகள் யோசனை