தூய்மை இந்தியா துதிப்பாடும் மத்திய சுகாதாரத்துறையின் அவலம்!

தூய்மை இந்தியா துதிப்பாடும் மத்திய சுகாதாரத்துறையின் அவலம்!

தூய்மை இந்தியா துதிப்பாடும் மத்திய சுகாதார துறையின் அவலம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தூய்மை இந்தியா துதிப்பாடும் மத்திய சுகாதாரத்துறையின் அவலம்!

புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் 60 நோயாளிகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா வார்டில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளன. சுகாதாரம் இல்லா கழிப்பறைகள், அடைப்பு நிறைந்த வாஷ் பேசின், அனைவருக்கும் ஒரே ஒரு குளியலறை.

தூய்மை இந்தியா துதிப்பாடும் மத்திய சுகாதாரத்துறையின் அவலம்!

இவை அனைத்தும் முறையாக சுத்தப்படுத்தப்படாமல் எச்சிலும் அழுக்குகளும் நிறைந்த தரைகள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலக அளவில் கொரானா வார்டுகளின் நிலை இந்த அளவுக்கு எங்கும் இருந்ததில்லை என்றும், இவற்றால் நோயாளிகள் குணமாவார்களா அல்லது நோயை பெருக்குவார்களா என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

தூய்மை இந்தியா துதிப்பாடும் மத்திய சுகாதாரத்துறையின் அவலம்!

வாயை மூடு கையை கழுவு சுத்தமாக இருங்கள், சத்தான உணவு சாப்பிடுங்கள், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று பேசும் அரசு நோயாளிகளின் அவலநிலையை களைய உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும் அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.