“வாய மூடிட்டிருக்கணும்னு இதனால்தான் பெரியவங்க சொன்னாங்களோ ” -திறந்த வாயில் நுழைந்த பாம்பு

“வாய மூடிட்டிருக்கணும்னு இதனால்தான் பெரியவங்க சொன்னாங்களோ ” -திறந்த வாயில் நுழைந்த பாம்பு

ஒரு வயது சிறுவன் வாய்க்குள் ஒரு பாம்பு நுழைந்ததால் ,அந்த சிறுவனை டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றி வருகிறார்கள் .

“வாய மூடிட்டிருக்கணும்னு இதனால்தான் பெரியவங்க சொன்னாங்களோ ” -திறந்த வாயில் நுழைந்த பாம்பு

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் போலாப்பூர் கிராமத்தில் ஒரு வயது சிறுவன் வாயை திறந்து கொண்டு தூங்கி கொண்டிருந்தான் .அப்போது ஒரு பாம்பு ஒன்று அங்கு வந்தது .அந்த பாம்பை கவனிக்காத சிறுவன் அயர்ந்து தூங்கினான் .அப்போது அந்த சிறுவனின் தாயார் வீட்டு தோட்டத்திற்கு சென்றிருந்தார் .அந்த நேரம் தோட்டத்தின் புதரிலிருந்து வீட்டிற்க்குள் வந்த பாம்பு, வீட்டில் பாயில் படுத்திருந்த சிறுவனின் அருகே வந்தது .அப்போது சிறுவன் வாயை திறந்து வைத்துக்கொண்டு தூங்கியதால் அந்த பாம்பு அவரின் வாயை தன்னுடைய புற்று என்று நினைத்து உள்ளே நுழைந்து விட்டது .
அப்போது சிறுவன் திடீரென தன்னுடைய வாயில் ஏதோ ஒன்று நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்து திடீரென எழுந்து அந்த பாம்பை கடித்தான் .உடனே அந்த பாம்பு வலியால் துடித்தது,சிறுவன் பயத்தில் கத்தினான் .அந்த சத்தம் கேட்டு அங்கு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த அவனோட தாயார் ஓடி வந்து , அந்த சிறுவனை பாம்பிடமிருந்து காப்பாற்றினார் . .
இருந்தாலும் அந்த பாம்பு அவன் வாய்க்குள் பாதி நுழைந்து விட்டதால் அந்த சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர் .அங்கு அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது .அந்த சிறுவனின் தந்தை இறந்த பாம்பை டாக்டர்களிடம் காமித்து சோதனை செய்த போது அந்த டாக்டர்கள் இது கொடிய விஷமுள்ள பாம்பு என்று கூறி ,சரியான நேரத்தில் சிறுவனை தூக்கி வந்ததால் அவன் காப்பாற்றப்பட்டான் என்றனர் .

“வாய மூடிட்டிருக்கணும்னு இதனால்தான் பெரியவங்க சொன்னாங்களோ ” -திறந்த வாயில் நுழைந்த பாம்பு