ஐபிஎல் தொடரில் இன்று போட்டிகள் – மோதும் அணிகள் எவை?

 

ஐபிஎல் தொடரில் இன்று போட்டிகள் – மோதும் அணிகள் எவை?

ஐபிஎல் திருவிழாவில் போட்டிகள் அனல் பறக்கத் தொடங்கிவிட்டன. அணிகளில் வீரர்களை மாற்றுவது தொடங்கி பலவித சோதனைகளை ஒவ்வோர் அணியும் செய்துவருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதன் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை நீக்கி, இயன் மோர்கனை நியமித்தது அந்த அணியின் நிர்வாகம். இப்படி அதிரடி மாற்றங்கள் நிகழும் ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

ஐபிஎல் தொடரில் இன்று போட்டிகள் – மோதும் அணிகள் எவை?

முதல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் ராயல்சேலஞ்சர் பெங்களூர் அணியோடு மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

விராட் கோலி தலைமயிலான பெங்களூர் அணி 8 போட்டிகளில் ஆடி, 5 போட்டிகளில் வென்று பாயிண்ட் டேபிளில் 3-ம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அதிக நெட்ரன்ரேட்டில் வென்றால் இரண்டாம் இடத்துக்கு முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இன்று போட்டிகள் – மோதும் அணிகள் எவை?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, எட்டுப் போட்டிகளில் ஆடி, மூன்றில் மட்டுமே வென்றது. அதனால், பாயிண்ட் டேபிளில் 7-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி ராஜஸ்தானுக்கு மிகவும் அவசியமாது. அப்படி வென்றால் 4 அல்லது ஐந்தாவது இடத்துக்கு முன்னேற முடியும்.

ஐபிஎல் தொடரில் இன்று போட்டிகள் – மோதும் அணிகள் எவை?

இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டுப் போட்டிகளில் ஆடி, ஆறில் வென்று இரண்டாம் இடத்திலுள்ளது. இன்றைக்கு வெற்றி கிடைத்தால் முதலிடத்திற்கு முன்னேறும்.

ஐபிஎல் தொடரில் இன்று போட்டிகள் – மோதும் அணிகள் எவை?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் எனில், இன்றைய வெற்றி மிகவும் அவசியம். ஏனெனில், எட்டுப் போட்டிகளில் ஆடிய சென்னை அணி, மூன்றில் மட்டுமே வென்று ஆறாம் இடத்தில் உள்ளது.

இன்றைக்கும் நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று விட்டால், சென்னை ஏழாம் இடத்துக்கு கீழே இறங்க வேண்டியிருக்கும். ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியாமலே போய்விடும் ஆபத்து இருக்கிறது. எனவே இன்றைய ஆட்டம் சென்னைக்கு பெரும் திருப்புமுனையை அளிக்கக்கூடியது.