இன்றைக்கு கேரளாவோடு மோதுகிறது northeast united fc – ISL கால்பந்து திருவிழா

 

இன்றைக்கு கேரளாவோடு மோதுகிறது northeast united fc –  ISL கால்பந்து திருவிழா

கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ISL கால்பந்து போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பெரிய போட்டிகள் எதுவுமே கொரோனாவால் நடத்தப்பட வில்லை. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளே ஐக்கிய அமீரகத்தில்தான் நடந்தன. அதனால்,  ISL போட்டிகள் நடக்குமா நடக்காதோ என்ற அச்சம் இருந்தது.

ஆனால், கோவா மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி ISL போட்டிகளை நடத்த முடிவெடுதார்கள். அதன்படி போட்டிகள் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பரபரப்பாக போய்கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு கேரளாவோடு மோதுகிறது northeast united fc –  ISL கால்பந்து திருவிழா

நேற்றைய போட்டியில் கோவா அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடந்தது.. இரு அணிகளும் தாங்கள் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகளைக் காட்டிலும் எதிரணி கோல் போடாமல் பார்த்துக்கொண்டதில் அதிக கவனம் காட்டினர். அதனால், மேட்ச் இறுதிகட்டம் வரை எந்த அணியும் கோல் ஏதும் போடவில்லை.

ஒருவேளை எந்த அணியும் கோல் போடாலமேயே மேட்ச் முடிந்துவிடுமோ என்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனால், கடைசி நிமிடங்களில் மும்பை அணிக்கு ஒரு பெனாலிட்டி வாய்ப்பு கிடைத்தது. மும்பையின் ஆடம் லீ ஃபாண்ட்ரே அதை அழகான கோலாக்கி மும்பைக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால், மும்பை அணி இரண்டாம் வெற்றியை ருசித்தது.

இன்றைக்கு கேரளாவோடு மோதுகிறது northeast united fc –  ISL கால்பந்து திருவிழா

இன்றைய போட்டியில் கேரளா அணியை எதிர்கொள்கிறது north east united fc. முதல் போட்டியில் அசத்தலான வெற்றியைத் தட்டிச்சென்றது northeast united fc அணி. அதனால், இம்முறை அந்த நம்பிக்கையோடு ஆடும்.

கேரளா அணியில் பல மாற்றங்கள் நடந்திருப்பதால் அது வெற்றி பெரும் எனப் பலரும் கணிந்த்த நிலையில், கேரளா அணியோ முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதனால், இம்முறை வெற்றிக்கு கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

பாயிண்ட் டேபிளிள் north east united fc அணி முதல் இடத்திலும் கோவா அணி பத்தாம் இடத்திலும் இருக்கின்றன.