Home விளையாட்டு கிரிக்கெட் மும்பை முதலிடத்தை தக்க வைக்குமா? பெங்களுருடன் இன்று சவால்!

மும்பை முதலிடத்தை தக்க வைக்குமா? பெங்களுருடன் இன்று சவால்!

ஐபிஎல் தொடரில் ஒவ்வோர் அணியும் லீக் போட்டியில் 14 ஆட்டங்கள் ஆட வேண்டும். தற்போது இரு அணிகளைத் தவிர மற்ற அணிகள் 12 போட்டிகள் ஆடிவிட்டன.

மீதமிருக்கும் மும்பை இண்டியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ரொம்பவே சுவாரஸ்யமாகச் சென்றது. முதலில் ஆடிய பெங்களூர் அணி 201 ரன்கள் குவிக்க, மும்பை இண்டியன்ஸ் தொடக்க வீரர்கள் சொதப்ப, தோற்றுவிடும் எனும் நிலையிலிருந்து அணியை இஷான் கிஸானும் பொல்லார்டும் அதிரடியாக விளையாடி வெற்றி பக்கம் அழைத்து வந்தனர். ஆனாலும் ஸ்கோர் சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவரில் 7 ரன்களை மட்டுமே மும்பை எடுக்க, எளிதாக வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

இன்றைய நிலையில் இரு அணிகளும் 11 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், நெட்ரன்ரேட் அடிப்படையில் பாயிண்ட் டேபிளில் மும்பை முதலிடத்தில் உள்ளது. பெங்களூர் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இன்றைக்கு மும்பை வென்றால், முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மாறாக தோற்கும் பட்சத்தில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படலாம்.

பெங்களூர் இன்று வென்றால், முதல் இடத்திற்கு முன்னேறலாம். மாறாக தோற்றால் இரண்டாம் இடத்தில் இருக்கலாம். ஒருவேளை அதிக ரன்ரேட் அடிப்படையில் தோற்றால் மூன்றாம் இடத்திற்கு நகரும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முதலிடத்தில் யார் என்பதற்கான போட்டி.

மும்பை இண்டியன்ஸ் அணியின் பெரிய பலமான கேப்டன் ரோஹித் ஷர்மா, காயத்தால் இன்றும் ஆட மாட்டார் என்றே தெரிகிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. கேப்டனாக வழிநடத்துவதிலும் சிக்கல் ஒரு பக்கம், பேட்ஸ்மேனாகவும் அணிக்கு இழப்பு. இந்தத் தொடரில் அவர் நல்ல ஃபார்மில் இருந்தார். 9 போட்டிகளில் ஆடி, 260 ரன்கள் அடித்திருக்கிறார்.

டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹிர்த்திக் பாண்டியா, பொல்லார்டு என பேட்டிங்கிலும் போல்ட், பும்ரா, பட்டின்ச, ராகுல் சாஹர் என பவுலிங்கிலும் வலுவாகவே உள்ளது மும்பை.

பெங்களூர் அணியில் படிக்கல், ஆரோன் பின்ச், கோலி, டி வில்லியர்ஸ், மொய்ன் அலி, மோரிஸ் என பேட்டிங்கிள் வெளுக்க காத்திருக்கிறார்கள். அதிலும் டிவில்லியர்ஸ் செம ஃபார்மில் இருக்கிறார்.

பவுலிங்கைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர், மோரிஸ், சிராஜ், சஹல், சைனி என செம ஸ்ட்ராங்கான படை இருக்கிறது.

எனவே இன்றைய போட்டி ஆடியன்ஸ்க்கு விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ரோஹித் ஷர்மா இல்லாததால் வெற்றி வாய்ப்பு சற்று பெங்களூர் பக்கம் சாய்ந்திருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

நெருங்கி வரும் ‘நிவர்’ புயல் : சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் மையம்!

சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது....

அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்

வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக அசாமில் பசுக்களுக்காக தனி மருத்துவமனை ஒன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக...

ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகள் காவல் நிலையம் வந்து தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்று அவர்களுக்கு உடற்பயிற்சியும் போலீசார் அளி்க்கின்றனர்.

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

பீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி...
Do NOT follow this link or you will be banned from the site!