Home விளையாட்டு கிரிக்கெட் முதல் இடத்துக்கு முன்னேறுமா டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஹைதராபாத் vs டெல்லி!

முதல் இடத்துக்கு முன்னேறுமா டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஹைதராபாத் vs டெல்லி!

ஐபிஎல் தொடரில் நான்கு அணிகள் 12 போட்டிகள் ஆடி விட்டன. அதிலிருந்து பாயிண்ட் டேபிளில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டன.

இன்றைய போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 11 போட்டிகளில் ஆடி, 7-ல் வென்று 14 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது டெல்லி. இன்று அது வென்றால், முதல் இடத்தைப் பெற்றுவிடும். புதன் கிழமை நடைபெறும் மும்பை vs பெங்களூரில் யார் வென்றாலும் ரன்ரேட் அடிப்படையில் முதல் இடம் அல்லது இரண்டாம் இடத்தில் தக்க வைத்துக்கொள்ளும்.

ஒருவேளை இன்றைய போட்டியில் தோற்றால், நாளைய வெற்றி தோல்வி அடிப்படையில் மூன்றாம் இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதனால், இன்றைய வெற்றியைப் பெறுவது பாதுகாப்பானதாக இருக்கும் என நினைக்கும்.

மோசமான நிலையில் உள்ளது ஹைதராபாத். இன்று, அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் 10 புள்ளிகளோடு ஆறாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. பஞ்சாப், கொல்கத்தா அடுத்தடுத்த போட்டிகளில் தோற்கும் பட்சத்தில் பிளே ஆப் செல்ல சிறிதளவு வாய்ப்பிருக்கிறது. மாறாக இன்று தோற்றுவிட்டால் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். அதனால், இன்றைய போட்டி ஹைதராபாத்துக்கு வாழ்வா.. சாவா போட்டி. அதனால், கடுமையாகப் போராடும்.

டெல்லி தனது கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. எனவே, ரஹானே பேட்டிங்கை நம்பமுடியவில்லை. தவான் ஓரளவு தாக்குப் பிடித்தால் ஆடுகிறார். ஆனாலும் நம்பிக்கை உரியவரே. ஆயினும் ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட், ஜெட்மெயர், ஸ்டொயினிஸ் என பேட்டிங்கிலும் ரபாடா, நொர்ட்ஜெ, அக்‌ஷர் படேல், அஸ்வின் என பவுலிங்கிலும் ஸ்ட்ராங்காவே இருக்கிறது.

ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோ, வார்னர், மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ப்ரியம் கார்க் என பேட்டிங்கிலும், நடராஜன், ஹோல்டர், ரஷித் கான் என பவுலிங்கிலும் சொல்லும்படியாகவே இருக்கிறது.

எனவே, இன்றைய போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளை தீர்க்க விவசாயிகளை டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

குஜராத்தில் அமலில் உள்ள இரவு ஊரடங்கை பயன்படுத்தி, கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி,...

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு

நம் நாட்டில் கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் ஒன்றில் 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆசிய பிராந்திய...
Do NOT follow this link or you will be banned from the site!