Home விளையாட்டு கிரிக்கெட் ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

ராஜஸ்தான் vs ஹைதராபாத் – ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். முகம்மது சிராஜ் ஐபிஎல்லில் புதிய சாதனையைப் பதித்துள்ளார்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் ஆடி, 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் 6-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது ஐந்தாம் இடத்திற்குச் செல்ல உதவும்.

ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி, 3 மட்டும் வென்று பாயிண்ட் டேபிளில் 7-ம் இடத்திலுள்ளது. இன்றைய வெற்றி இந்த அணிக்கு இல்லையெனில் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

இன்றைய போட்டி என்பது இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, தோல்வியைத் தவிர்க்க இரு அணிகளும் மிகக் கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இரு அணிகளின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியே வென்றது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணியில் மனிஷ் பாண் டே, டேவிட் வார்னர் இருவர் மட்டுமே ஓரளவு ஆடினார்கள். அதனால் ஸ்கோர் 158 மட்டுமே.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்கம் பெரிய சரிவே. பென் ஸ்டோக்ஸ் 5, பட்லர் 16, ஸ்மித் 5 ரன்களே எடுத்தனர். சஞ்சு சாம்சன், உத்தப்பா சிறிதளவு நம்பிக்கை அளித்தாலும் விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தனர்.

ஆனால், ரியான் ப்ராக் மற்றும் ராகுல் திவட்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் வெற்றி இலக்கைத் தொட்டது. ப்ராக் 26 பந்துகளில் 42; ராகுல் திவட்டியா 28 பந்துகளில் 45 ரன்கள் என விளாசினர்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, வில்லியம்சன், கார்க், அபிஷேக் ஷர்மா என பேட்டிங் வலுவாக இருக்கிறது. பவுலிங்கில் ரஷித் கான், நடராஜன் இருவரும் சிறப்பாக வீசுகிறார்கள். மற்றவர்களின் பந்துவீச்சு ஒவ்வொரு போட்டிக்கும் மாறுபடுகிறது.

ராஜஸ்தான் அணியில் ராபின் உத்தப்பாவை மிடில் ஆர்டரிலிருந்து ஓப்பனிங் மாற்றியதும், அந்த அணியின் ஸ்கோரும், நம்பிக்கையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பட்லர் மிடில் ஆர்டரில் மாற்றப்பட்டு நல்ல ஃபார்ம்க்கு வந்துவிட்டார். சென்னை அணியோடு மோதிய போது 48 பந்துகளில் 70 ரன்களை விளாசினார் பட்லர்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

போட்டியின் முடிவை எந்த நேரமும் மாற்றும் வல்லமையோடு ராகுல் திவட்டியா இருக்கிறார். ராஜஸ்தான் வென்ற 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளை இவரால்தான் வெல்ல முடிந்தது. பவுலிங்கில் ஆர்ச்சர், தியாகி, கோபல் ஆகியோரின் வீச்சு வெற்றிக்கு உதவும் வகையில் உள்ளது.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

இரு அணிகளுக்கும் சம அளவில் ப்ளஸ், மைனஸ் உள்ளது. எனவே, டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்தெடுத்து எந்த அணி ரன்களை 130- 150 க்குள் கட்டுப்படுத்துகிறதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் - ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து...

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி – குஷ்பு ட்வீட்!

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த...

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள்...
- Advertisment -
TopTamilNews