இன்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு Vs ஹைதராபாத் – யார் வெல்வார்? RCBvsSRH

இன்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு Vs ஹைதராபாத் – யார் வெல்வார்? RCBvsSRH

ஐபிஎல் திருவிழா தொடக்கமே சூடு பிடித்துவிட்டது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டெல்லி கேபிட்டல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய இரண்டாம் போட்டி இன்னும் பரபரப்பானது. இரு அணிகளின் ஸ்கோரும் சமனாக சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது.

இன்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இன்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு Vs ஹைதராபாத் – யார் வெல்வார்? RCBvsSRH

ராசியே இல்லாத அணி என்று பெயர் எடுத்தது ஆர்சிபி. இந்த டீமின் முதல் கேப்டன் டிராவிட். அவர் தொடங்கி பலரும் கேப்டனாக இருந்துவிட்டார்கள். ஏன் அதிரடி பேட்ஸ்மேன் கோலியே மூன்றாண்டுகளாக கேப்டனாக இருக்கிறார். ஆனால், கோப்பை அருகில்கூட இந்த அணியால் செல்ல முடியவில்லை. இதனை எதிர்த்து ஆடும் எஸ்ஆர்ஹெச் டீம் ஒருமுறை ஐபிஎல் கோப்பை வென்றிருக்கிறது.

இன்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு Vs ஹைதராபாத் – யார் வெல்வார்? RCBvsSRH

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர். பேட்டிங் வலு என்றும் சொல்லமுடியாது; வலுவற்றது என்றும் சொல்ல முடியாது.  சந்தீப், டேவிட் வார்னர், கேன் வில்லியம்ஸ், மனிஷ் பாண்டே, அபிஷேக் ஷர்மா என்று பேட்ஸ்மேன் பட்டியல் விராட் சிங் வரை நீள்கிறது. பவுலர் மிட்செல் மார்ஸ் கூட சில போட்டிகளில் நன்றாக ஆடக்கூடியவே. ஆனால், மிகவும் நம்பக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள் டேவிட் வார்னர், பேர்ஸ்ட்டோ, மனிஸ் பாண்டே ஆகியோரையே சொல்ல முடியும். பவுலிங்கில் புவனேஷ்வர், ரஷித்கான் ஆகியோரையே நம்பியுள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு Vs ஹைதராபாத் – யார் வெல்வார்? RCBvsSRH

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங் செம வலுவாக இருக்கிறது. ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், படிக்கல், விராட் கோலி, மொயின் அலி என வரிசைக்கட்டி ஆட ரெடியாக இருக்கிறார்கள். பவுலிங்கிலும் செம ஃபார்மில் இருக்கும் ஆடம் ஸாம்பா இந்த அணியில்தான் இருக்கிறார். சாஹல் பந்து வீச்சு நிச்சயம் ஐக்கிய அமீரக மைதானங்களில் எடுபடும் என்றே தெரிகிறது. இஷ்ரூ உடானா பவுலிங் கைக்கொடுக்கும் என்று தெரிகிறது.

இன்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு Vs ஹைதராபாத் – யார் வெல்வார்? RCBvsSRH

ஆக, இரு அணிகளில் வீரர்களின் பலத்தைக் கொண்டு பார்க்கையில் பெங்களூரு அணிக்கு சற்று வாய்ப்பு அதிகம் என்று சொல்லலாம். ஆனால், டேவிட் வார்னரின் கச்சிமான கணிப்பில் அந்த அணி பல முறை வென்றிருக்கிறது. அதனால், போட்டி விறுவிறுப்பாகவே இருக்கும்.