இரண்டாவது நாளாக சரிந்தது தங்க விலை.. இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுகோங்க!

 

இரண்டாவது நாளாக சரிந்தது தங்க விலை.. இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுகோங்க!

ஆண்டு தொடக்கத்தில் ரூ.27 முதல் 30 வரையிலேயே நீடித்து வந்த தங்க விலை மாறிமாறி ஏற்றதையும் இறக்கத்தையும் கண்டது. அதனைத்தொடர்ந்து, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவால் தங்க விலை வரலாறு காணாத விலை உயர்வை அடைந்ததது. சுமார் ரூ.44 ஆயிரம் உயர்ந்த தங்கம் 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஏற்கனவே பண ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த மக்களிடையே இந்த தங்க விலை உயர்வு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தங்கம் மட்டும் அல்லாது வெள்ளி விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று தங்க விலை குறைந்ததை தொடர்ந்து இன்றும் குறைந்திருக்கிறது.

இரண்டாவது நாளாக சரிந்தது தங்க விலை.. இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுகோங்க!

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.82 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,084க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.656 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,672க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.