‘கிராமுக்கு ரூ.48 குறைவு’ : ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

 

‘கிராமுக்கு ரூ.48 குறைவு’ : ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருந்ததால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது தெரிந்தவையே. பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கியதால், ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை எட்டியது. எல்லா நாடுகளிலும் இதே நிலை தான் என்றாலும், தங்க ஆபரணங்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் இந்திய மக்கள் மத்தியில் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது பிற நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பி இருப்பதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து தங்கம் விலையும் சரிவைச் சந்தித்து வருகிறது.

‘கிராமுக்கு ரூ.48 குறைவு’ : ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ரூ.4,608க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,700க்கும் விற்பனையாகிறது.