தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை: கிராமுக்கு ரூ.13 அதிகரிப்பு!

 

தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை: கிராமுக்கு ரூ.13 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு விலை உயர்வை சந்தித்த பிறகு, கணிசமாக குறைந்தது. அதாவது ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை ரூ.6,000 வரை குறைந்தது. இருந்தாலும் பழைய படி தங்கம் விலை ரூ.28 முதல் 29 ஆயிரத்திற்கு விற்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்திருக்கிறது. தற்போது தங்கம் விலை ரூ.37 ஆயிரத்தில் நீடித்து சூழலில், பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை: கிராமுக்கு ரூ.13 அதிகரிப்பு!

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வரும் தங்கம் விலை இன்றும் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,748க்கு விற்பனையாகிறது. அதன் படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,984க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,000க்கும் விற்பனையாகிறது.