• December
    15
    Sunday

Main Area

Main



இன்று உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாள்   

முதியோர்
முதியோர்

எவ்வளவு தான் நாகரிகமும், கல்வியறிவும் பெற்றாலும், எத்தனைக் காலங்கள் ஆனாலும் முதியோரைக் கொடுமைப்படுத்தும் செயல் குறைந்தப்பாடாக இல்லை. வெளிநாடுகளில் முதியோர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் 1 சதவிகிதம் கூட நம் நாட்டில் கொடுக்கப்படுவது கிடையாது என்கிறது ஆய்வு முடிவுகள்.

old

சுதந்திரமடைந்த வருடத்தில், நம் நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த வயதானவர்களுக்கு எதிரான கொடுமைகள், தற்பொழுது  50 சதவிகிதமாக உயர்ந்து அதிச்சியைத் தருகிறது. 
முதியோர் வன்கொடுமைகள் இந்தியா முழுக்கவே நிகழ்ந்தாலும், சென்னையிலும், பெங்களூருவிலும்  தான் அதிகமாக நடைப்பெறுவதாக மேலும் அதிர்ச்சியைக் கிளப்புகிறார்கள் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பினர். அவர்களின் ஆய்வு முடிவுகளின் படி பெங்களூருவில் 75 சதவிகிதமும், சென்னையில் 53 சதவிகிதமும் முதியோர்களைக் கொடுமைப்படுத்தும் செயல்கள் இன்றும் நடைப்பெறுவதாகச் சொல்கிறார்கள். 

oldage home

தெருவிற்கு நான்கைந்து முதியோர் இல்லங்கள் வேக வேகமாக அதிகரித்து வரும் நகரங்களாகவும் அவர்கள் சென்னையையும், பெங்களூருவையும் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக சென்னையில், மருமகள்களால்  கொடுமைக்குள்ளாகும் முதியவர்கள் 37 சதவிகிதமும், மகன்களால் கொடுமைப்படுத்தப்படும் பெற்றோர்கள் 56 சதவிகிதமும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை நீள்கிறது. 
உலகம் முழுவதும் உள்ள வயதான பெரியவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், அதற்கான வழிமுறைகளைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

oldage home

வழக்கம் போல இதையெல்லாம் முகநூலில் ஷேர் செய்ய நேரமில்லாமல் நாமும் படித்து, ‘உச்’ கொட்டி அடுத்த செய்திக்கு கடந்து போய்விடுகிறோம்.

2018 TopTamilNews. All rights reserved.