காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கத்திரி வெயில் கடந்த 28 ஆம் தேதியே முடிந்து விட்டது. ஆனால் கோடை வெப்பம் குறைந்த பாடில்லை. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக உள்தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் கூறியது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்!

அதன்படி தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும். இது வரும் 3 ஆம் தேதி மகாராஷ்டிரா மாற்று குஜராத் நோக்கி செல்லும் என்றும் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்!

இதனால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இதனால் மீனவர்கள் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு நான்காம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.