20 மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்…வானிலை ஆய்வு மையம் சொல்லும் டிப்ஸ்!

 

20 மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்…வானிலை ஆய்வு மையம் சொல்லும் டிப்ஸ்!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதேபோல் இன்று நீலகிரி, கோவை, தேனி ,தென்காசி, சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்…வானிலை ஆய்வு மையம் சொல்லும் டிப்ஸ்!

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், தர்மபுரி ,சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ,அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சிராப்பள்ளி, மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

20 மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்…வானிலை ஆய்வு மையம் சொல்லும் டிப்ஸ்!

தமிழகம் புதுவையில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கும் என்பதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும் . வெள்ளை மற்றும் வெளிர் நிற கதர் ஆடைகளை அணிவது சிறந்தது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.