“நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று”.. வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்!

 

“நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று”.. வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் இன்று நிகழ்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரு நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது சந்திரன் சூரியனின் கதிர்களை பூமியில் அடைவதைத் தடுக்கிறது. வரும் இன்று காலை 9 மணி 16 நிமிடங்களுக்குக் கிரகணம் தொடங்கி பிற்பகல் 3 மணி நான்கு நிமிடங்களுக்கு நிறைவடையும்.

“நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று”.. வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்!

இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய பில்டர் கண்ணாடி அணிந்து பார்க்கலாம் என்றும், வெல்டிங் கண்ணாடி பயன்படுத்திப் பார்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் வடமாநிலங்களில் முழுமையாகத் தெரியும் இந்த கிரகணம், சென்னையில் 34% மட்டுமே தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் முழுமையாக, 12:10 மணிக்கு தெரியும். மத்திய ஆப்பிரிக்க, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் நிகழும் இந்த கிரகணமானது இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.