kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பங்குச் சந்தைகளை பதம் பார்த்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! சென்செக்ஸ் 74 புள்ளிகள் குறைந்தது....

பங்கு வர்த்தகம் சரிவு
பங்கு வர்த்தகம் சரிவு
Loading...

இன்றைய வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது. திருப்தி அளிக்காத நிறுவனங்கள் நிலவரம், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. 

ரூபாய் வெளிமதிப்பு வீழ்ச்சி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ்பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், ஐ.டி.சி., ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, சன்பார்மா உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 918 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,524 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.32 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.140.90 லட்சம்  கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 74.48 புள்ளிகள் குறைந்து 37,328.01 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 36.90 புள்ளிகள் சரிந்து 11,017.00 புள்ளிகளில் முடிவுற்றது.

2018 TopTamilNews. All rights reserved.