darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்தது....

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ஆனால் பின்னர் படிப்படியாக சரிவு கண்டது. இருப்பினும் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் சன்பார்மா, டெக்மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எல் அண்டு டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், பவர் கிரிட், ஓ.என்.ஜி.சி., ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹீரோமோட்டோகார்ப் உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. வேதாந்தா, டி.சி.எஸ். மற்றும் மாருதி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,268 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,212 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.90 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.140.73 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.16 புள்ளிகள் உயர்ந்து 37,402.49 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.10 புள்ளிகள் அதிகரித்து 11,053.90 புள்ளிகளில் முடிவுற்றது.

2018 TopTamilNews. All rights reserved.