பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு!

 

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 3842 மையங்களில் இன்று நடைபெறுகிறது.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு!

மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதன் காரணமாக நீட் தேர்வானது இன்று மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 15.97 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு!

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 14 நகரங்களில் நடைபெறுகிறது. நீட்தேர்வு 2 மணிக்கு தொடங்கும் நிலையில் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.