இன்று ஃபைனல்: ஜாப்னா Vs தம்புள்ளை – யாருக்கு LPL கோப்பை!

 

இன்று ஃபைனல்: ஜாப்னா Vs தம்புள்ளை – யாருக்கு LPL கோப்பை!

கொரோனா அச்சத்தால் பல முறை ஒத்தி வைக்கப்பட்ட இலங்கை LPL போட்டித் தொடர் சரியாகத் தொடங்கி இன்று இறுதிப் போட்டியில் நிறைவடைய உள்ளது. இந்தத் தொடரில் கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங் , ஜாப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

இதில் கண்டி அணி மட்டும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மற்ற அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியோடு மோதியது காலி கிளாடியேட்டர்ஸ் அணி. இதில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று ஃபைனல்: ஜாப்னா Vs தம்புள்ளை – யாருக்கு LPL கோப்பை!

இரண்டாம் அரையிறுதிப் போட்டி ஜாப்னா ஸ்டாலியன்ஸ் Vs தம்பள்ளை வைக்கிங் என்று அமைந்திருக்கிறது. இதில் ஜாப்னா அணி எளிதாக வென்று ஃபைனலுக்குள் கால் தடம் பதிக்கும் வாய்ப்பைப் பெற்றது.

இன்று இறுதிப்போட்டி, ஜாப்னா ஸ்டாலியன்ஸ் Vs காலி கிளாடியேட்டர்ஸ் என்று மாறியிருப்பது பலருக்கும் ஆச்சரியம்தான். ஏனெனில், இறுதிப்போட்டியில் நிச்சயம் கொழும்பு அணி இருக்கும் எனப் பலரும் நினைத்திருந்தார்கள்.

இன்றைய போட்டியில் ஜாப்னா அணியின் முக்கிய அஸ்திரமாக இருக்கப்போகிறவர் ஹசரங்கா. இவரின் பந்து சுழற்றலில் எதிரணி வீரர்கள் திண்றுவதை இந்த சீசனில் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்த சீசனின் அதிக விக்கெட்டுகளை எடுத்தவரும் இவரே. 9 போட்டிகளில் பந்து வீசி, 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எகானமியும் 5.27 தான்.

இன்று ஃபைனல்: ஜாப்னா Vs தம்புள்ளை – யாருக்கு LPL கோப்பை!

காலி கிளாடியேட்டரின் முக்கிய அஸ்திரம் பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலக. இவர் 9 போட்டிகளில் ஆடி 475 ரன்களை விளாசியிருக்கிறார். அதிகபட்சமாக 94 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரன் ரேட் 145 என வியக்க வைக்கிறார். எனவே இன்றைக்கு இவரின் அதிரடி இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலம்.

இலங்கை எல்.பி.எல் கோப்பையை யார் கைப்பற்றபோகிறார்கள் என்று
இன்று மாலை தெரிந்துவிடும்.