ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.

ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

அந்த வகையில் ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1,3,4 ஆம் தேதி வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தரவேண்டும் என்றும் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேஷன் ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.  டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட்டாது என தெரிவிக்க வேண்டும் என்றும்  ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்றும் அதற்கு மாற்றாக வேறு ஒருநாளில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படவுள்ளது. 3,4 ஆம் தேதிகளிலும் வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் அளிக்கவுள்ள நிலையில் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது.