இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தவர் விஸ்வாமித்திரர் . அவரது தவ வலிமை நாசமாக்க அனேக தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டன . அதில் ஒன்றுதான் மேனகையை அனுப்பி மயக்கியது . ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் வைராக்கியத்துடன் தவத்தில் ஈடுபட்டு தவ வலிமையை பெருக்கிக் கொண்டார் . கடைசியில் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று அழைக்கப்பட்டார் .

இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

விஸ்வாமித்திரர் அளித்த கொடைகளில் முக்கியமானது காயத்ரி மந்திரம் . அது குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுகிறது .  மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா ‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்’ என்றே குறிப்பிட்டுள்ளார். அந்தளவு மகிமைமிக்கது காயத்ரி மந்திரம் .

காயத்ரி மந்திரம் மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமானது . அதன் சக்தியைக் குறித்து மெய்ஞானிகள் மட்டுமின்றிவிஞ்ஞானிகளும் வியந்து போற்றுகின்றனர் . ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள காயத்ரி மந்திரம் சாவித்ரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது.

விஸ்வாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரத்தின் பெருமையால் பிறகு ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரம் உருவாகத் தொடங்கியன . காயத்ரி மந்திரங்களின் தாய் என்பதால் முதலில் அதை ஜபித்த பின்பே பிற மந்திரங்கள் ஜபிக்கப்படுக்கின்றன .

இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்.

யோ -எவர் , ந -நம்முடைய , தியோ -புத்தியை , தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக , ஸவிது -உலகைப் படைத்த , வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான , பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்

இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே பாவம் தெரிந்தே செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனதை எங்கெங்கோ திரிய விட்டுக் கொண்டு வாய் மட்டும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்தாலும் பலன் கிடையாது. ஆனால் மன ஒருமைப்பாட்டுடன் முறையாக 27 முறை கூறினாலே பலன் கிடைக்கும் என்றாலும் அதிகமுறை ஜபிக்க அதிக பலன் தரும் . எத்தனை முறையை என்பதை விட மன ஒருமைப்பாடு முக்கியம் . ஜபத்தின் முடிவில் ஓம் சாந்தி சாந்தி சாந்தி எனகூறி நிறைவு செய்ய வேண்டும் .

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று இரு கைகளையும் முகத்திற்கு நேராகக் கூப்பிக் கொண்டு ஜபிக்க வேண்டும் . நண்பகலில் கிழக்கு முகமாக உட்கார்ந்து கைகளை மார்புக்கு நேராக கூப்பிக் கொண்டு ஜபிக்க வேண்டும் , மாலை சந்தியசந்திய வேளையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு நேராகவும் கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

இன்று காயத்ரி ஜபம் தொடங்கும் நாள் . ஆவணி அவிட்டத்தின் மறுநாள் காயத்ரி ஜபத்தை தொடங்குவது மரபு . காயத்ரி மந்திரத்தை வழங்கியவர் ராஜரிஷி என போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்

காயதிரி மந்திரம் ஜெபிப்பவர்கள் அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள் பெரியோர்கள்.
நம்பிக்கையுடன் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் நோய்கள் நீங்கும் . துன்பங்களில் இருந்து விடுபடலாம் . மனதிற்கு சாந்தி , நெஞ்சுக்கு நிம்மதி , உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் .
மனத்தூய்மையுடன் பெண்கள் , ஆண்கள் சிறுவர்கள் , இளைஞர்கள் எப்பருவத்தினரும் காயத்ரியை ஜபித்து பலன் பெறலாம் . விஸ்வாமித்திரருக்கும் நன்றி தெரிவித்து வணங்குவோம் . காயத்ரியை ஜபித்து இறை ஆற்றலை வழிபட்டு எல்லா நலன்களையும் பெறுவோம் .