Home தமிழகம் ஆரம்பமானது தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்!

ஆரம்பமானது தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்!

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்திற்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் இருந்த அனைத்து காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இருவரின் உடல்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தபடுவதாகவும், கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்றும் வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்படுவதாக மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல- திருமாவளவன்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது. இதனிடையே...

23 தொகுதிகள் வரைக்கும் இறங்கிவந்துட்டோம் ஆனால்… தேமுதிக பார்த்தசாரதி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக தலைமையிலான...

கோவை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை கோவை அருகே குழந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூர் பகுதியை...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடம்! அசத்தும் இந்திய அணி!

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட...
TopTamilNews