• February
    20
    Thursday

Main Area

Main



இன்று 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – நியூசிலாந்தை வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?

Third T20
Third T20

ஹாமில்டன்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20  கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டன் செடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து நடந்த அடுத்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20  கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டன் செடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றும்.

ttn

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளதால் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக விளையாடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும். மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தப் போட்டியிலாவது ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.