எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பூர்வீக சொத்து கிடைக்கும்!!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பூர்வீக சொத்து  கிடைக்கும்!!

இன்றைய ராசிபலன்கள்

02-06-2020 (செவ்வாய்க்கிழமை)
நல்லநேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகுகாலம்
பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

மேஷம்
இன்று உங்களுக்கு இனிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாள். குடும்பத்தில் அமைதி தவழும். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து எளிதில் வெளிவந்து விடும்.

ரிஷபம்
எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரையும் நம்பிக்கையும் பெற்றுக் கொள்வார்கள். இதில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மொத்தத்தில் அமைதி தவழும் மாணவர்களின் கல்வி மேம்படும். முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும். கலைத்துறை, பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் வருமானத்தை தருவதாக இருக்கும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுனம்
புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவினை எட்டுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும். சொத்துக்கள் வாங்குவது, அதற்காக கடன் வாங்குவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளையும் இருப்பவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.

கடகம்
வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தவழும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கூட்டுத்தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.

சிம்மம்
இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள் பற்றாக்குறை இருந்து வந்த போதிலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். அவைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று விடும்.

கன்னி 
இன்றைய நாள், மன மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். வேலையில் இடமாற்றத்தை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய பல புதிய பாதைகள் தென்படும்.

துலாம் 
திருப்தியான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும். சொல்லிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

விருச்சிகம்
பிரயாணத்திற்கு வாய்ப்புண்டு என்பதால் உங்கள் பயணங்களால் வெற்றி அடைவீர்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.  உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போக போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இவற்றில் கவனம் தேவை.

தனுசு 
எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உத்தியோகத்தில் நல்ல நிலைமையை பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது.

மகரம்
தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் இவைகளில் நல்ல நிகழ்வுகள் இன்று உண்டாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா சம்பந்தப்பட்ட காரியங்களை துவக்குவதற்கு இன்று உகந்த நாளாகும். குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கும்பம்
பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை, பத்திரிக்கைத்துறை, மீடியா துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் கல்வி மேம்படும்.  சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

மீனம்
உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் செல்லும்.  சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முடிவு எடுப்பதை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கவும்.