மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்…

 

மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்…

மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மத்திய பிரதேசம் (28), குஜராத் (8), உத்தர பிரதேசம் (7), கர்நாடகா (2), ஒடிசா (2), ஜார்க்கண்ட் (2), நாகலாந்து (2), தெலங்கானா (1), ஹரியானா (1) மற்றும் சத்தீஸ்கர் (1) ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம் 54 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்…
பா.ஜ.க., காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதேசமயம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமானால் இடைத்தேர்தல் நடைபெறும் 28 தொகுதிகளையும் அந்த கட்சி கைப்பற்ற வேண்டும். இதனால்தான் மத்திய பிரதேச தேர்தல் அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்…
முதல்வர் யோகி ஆதித்யநாத்

அடுத்து உத்தர பிரதேசத்தில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அதேசமயம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இடைத்தேர்தல்கள் முடிவுகள் உணர்த்தி விடும் என்பதால் இந்த மாநிலத்தில் இடைத்தேர்தலும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.