darbar
  • January
    17
    Friday

Main Area

Main



இந்த ராசிக்காரர்கள் எல்லாம் இன்று வாக்குறுதி கொடுக்காதீர்கள்!

ராசிபலன்
ராசிபலன்

4.12.2019  புதன்கிழமை 
  
மேஷம்


மேஷ ராசி அன்பர்களே...! இன்று நீங்கள் குடும்ப பிரச்சினைக்கு உயர் முன்னுரிமை தர வேண்டும். கால தாமதமின்றி அதை விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.  ஏனெனில் இதை தீர்த்துவிட்டால், மற்றவை எளிதாகிவிடும். அதன்பிறகு குடும்பத்தினரிடம் ஆதிக்கம் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் வராது. நம்பிக்கை தரும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் 


ரிஷப ராசி அன்பர்களே...!  இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.  தொழிலில் கவனம் செலுத்துங்கள். கடமையை செய்ததற்காக   நிச்சயம் அதற்கான பணப்பலன் இன்று கிடைக்கும்.  வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் 


மிதுன ராசி அன்பர்களே ...!   பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். இனிமையான நடத்தையால் குடும்ப வாழ்வு பிரகாசமாகும். சிலர் அன்பான புன்னகையால் ஒரு தனி நபரை சமாளித்துவிடுவர். அனைவருடனும் நட்பாக பழக வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 4

கடகம் 


கடக ராசி அன்பர்களே ...!  குடும்ப பிரச்சினைகள் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். அதனால் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். மனம் திறந்த பேச்சு உங்கள் துணையுடன் உறவை மேம்படுத்தும். அன்புக்குரியவர் இல்லாமல் நேரத்தைக் கடத்துவது கஷ்டமாக இருக்கும். தன்னம்பிக்கையை ஊட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் 

சிம்ம  ராசி அன்பர்களே ...!  எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்புகள்  தேடி வரும். உணர்ச்சிகளை  தள்ளி வைத்துவிட்டு வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைக்கும். மனமகிழ்ச்சி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6

கன்னி 


கன்னி ராசி அன்பர்களே ...! உங்கள்  சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் படியான சம்பவங்கள் நிகழும். அதனால் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டிய சூழல் உண்டாகும்.உங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மீது கவனம் தேவை. உங்கள் லட்சியங்களை அடைய அருமையான  நாள். 
அதிர்ஷ்ட எண்: 5

துலாம் 

துலாம்  ராசி அன்பர்களே ...! பணியில் அழுத்தம் ஏற்படுத்தும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இருப்பினும் உங்கள்  கலகல பேச்சால் அதையெல்லாம் நொடியில் தூக்கி வீசிவிடுவீர்கள். வேலையை மாற்றுவது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். வேலையிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் 

விருச்சிக ராசி அன்பர்களே ...! உங்கள் நம்பிக்கை தான் உங்கள் பலமே.  வீட்டில் பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் துணையை குறைசொல்வதைத் தவிர்த்துவிடுங்கள். வீண் வாக்குறுதிகள் தராதீர்கள். நாவை அடக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 9

தனுசு 


ராசி அன்பர்களே ...! உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள். உங்கள் வீட்டின் வயதில் மூத்தவரின் ஆசி கிடைக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நீங்கள் கூறுவதை நல்ல முறையில் கேட்டு செயல்படுவார்கள். சந்தோஷம் பெருகும் நாள் 
அதிர்ஷ்ட எண்: 6

மகரம் 
மகர ராசி அன்பர்களே ...! நெருக்கடி ஏற்படும்  இருப்பினும் நம்பிக்கை, பொறுமையை இழக்காதீர்கள். புதிய முயற்சிக்கு வெற்றி கிட்டும். உங்கள் பிள்ளைகள் இன்று உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உத்வேகம் தரும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் 
கும்ப ராசி அன்பர்களே ...! உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். குடும்ப வாழ்வுக்கு  நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அக்கறையுடன் இருப்பதை  அவர்களுக்கு உணரவையுங்கள். குடும்பத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 4

மீனம் 
மீன ராசி அன்பர்களே ...! தேவையற்ற வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் எங்கு பேசினாலும் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். வேலையில் இன்று ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் நாள்
அதிர்ஷ்ட எண்: 1

2018 TopTamilNews. All rights reserved.