darbar
  • January
    29
    Wednesday

Main Area

Mainஇந்த ராசிக்காரர்கள் எல்லாம் இன்று நிதானத்தை கடைப்பிடியுங்கள்!

ராசிபலன்
ராசிபலன்

இன்றைய ராசிபலன்
03.12.2019 செவ்வாய் கிழமை                     
நல்லநேரம் 
காலை 8 மணி முதல் 9 வரை
மாலை 5 மணி முதல்  5.30 வரை
ராகுகாலம் 
பிற்பகல் 3 மணி முதல்  4.30 வரை
எமகண்டம் 

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு அதிக பதட்டமும்  படபடப்பும் ஏற்படும். இதனால் உங்கள்  பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் அல்லது யோகா செய்து உங்கள் பிரச்னையை போக்கி ஓரளவு சமாளிக்கலாம். அகந்தையால் உங்கள் மனைவியுடன் உங்களுக்கு சண்டைகள் ஏற்படும். நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 4
 

risbham

ரிஷபம் 

தொழிலில் புதிதாக சாதிக்கவேண்டும் என்று எண்ணினாலும் அது தோல்வியும் முடியும். பண தேவை அதிகரிக்கும். ஆனால்  நீங்கள் மாதிரி செலவு செய்ய முடியாத சூழல் ஏற்படலாம். அதனால் சற்று சங்கடமான சூழல் ஏற்படும். பணத்தை சிக்கனப்படுத்த வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட எண்: 4

midhunam

மிதுனம் 

இன்று உங்களுக்கான முக்கிய பணியே கணக்கு வழக்குகளை முடித்து வைக்க வேண்டியது தான். யாரிடமாவது கடன் பெற்றிருந்தால் அதை  முடிந்தளவு இன்று அடைத்துவிடப் பாருங்கள். எதிர்காலத்தில் அதுவே பிரச்னையாக  மாறலாம். 

அதிர்ஷ்ட எண்: 2

kadagam

கடகம் 

உங்கள் வாழ்க்கைத் துணையோடு  சில சண்டைகளும் மனஸ்தாபங்களும் வந்து போகும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சில நாட்கள் அவகாசம் எடுத்து கொள்வது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 5

simmam

சிம்மம் 


ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள்.  குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

kanni

கன்னி 

இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகளில் இன்று  வெற்றி உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நாள் 


அதிர்ஷ்ட எண்: 2

thulam

துலாம் 

கடந்த ஆண்டுகள்  ஏற்பட்ட மனஸ்தாபங்கள் எல்லாம் விரைவில் சரியாகிவிடும்.  இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். ஒவ்வொரு கஷ்டமான நேரங்களும் தருணங்களும்  உங்களை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.  நம்பிக்கையுடன் செயல்படும் நாள். 

அதிர்ஷ்ட எண்: 4

viruchagam

விருச்சிகம் 

 இன்றைய நாளில் உங்களுக்கு  அலைச்சல் அதிகமாகும். பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்து கொள்வது அவசியம். வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. நிதானத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டிய நாள். 


அதிர்ஷ்ட எண்: 6

dhanusu

தனுசு 

இன்று உங்களுக்கு நிச்சயம் பணவரவு உண்டு.  உங்களின் மனநிலையை சீராக வைத்து கொள்ள முயலுங்கள்.  உங்களுக்கான பாராட்டுக்கள்  விரைவில் தேடி வரும். அது தாமதமாகும் பட்சத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட எண்: 3

makaram

மகரம் 

உங்களை மீறி இன்று சில விஷயங்கள் உங்கள் குடும்பத்தில் நடக்கும். அதனால் மற்ற நாட்களை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள்.பல நேரங்களில் அதை ஆமோதிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதனால் வீண் கோபதாபங்களை மறந்து நிதானமாக பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 

அதிர்ஷ்ட எண்: 3

kumbam

கும்பம் 

இன்றைய நாள் உங்களுக்கான  பெரிய ஆயுதமே உங்கள் பொறுமை தான். எல்லா விஷயங்ககளையும் பொறுமையான அணுகுங்கள்.   உங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்கள் காணப்படும். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும். 


அதிர்ஷ்ட எண்: 1

meenam

மீனம் 

வீண் பகை உணர்வு, பொறாமையை தூக்கி எறியுங்கள். மற்றவர்கள் நிலையில் இருந்து அவர்களின் நிலையை யோசிக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுக்கு கிடைக்கவேண்டிய பணம்  சற்று தாமதமாகவே கிடைக்கும். குறிப்பாக உங்கள் உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய நாள் இன்று. 

அதிர்ஷ்ட எண்: 7

2018 TopTamilNews. All rights reserved.