darbar
  • January
    17
    Friday

Main Area

Mainஎந்த ராசியினருக்கு எல்லாம் காதல் வாழ்க்கை ஏற்றம் தரும்?

ராசிபலன்
ராசிபலன்

31.10.2019  வியாழக்கிழமை
நல்ல நேரம் 
காலை 10.45 மணி முதல் 11.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 1.30 மணி முதல்  3 வரை
எமகண்டம் 
காலை 6 மணி முதல்  7.30 வரை
சந்திராஷ்டமம்  - கார்த்திகை
பரிகாரம் - தைலம்
இன்று சுக்லசதுர்த்தி    
மேஷம்
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? குடும்ப பிரச்சினைக்கு உயர் முன்னுரிமை தர வேண்டும். தாமதமின்றி அதை விவாதிக்க வேண்டும். ஏனெனில் இதை தீர்த்துவிட்டால், மற்றவை எளிதாகிவிடும். அதன்பிறகு குடும்பத்தினரிடம் ஆதிக்கம் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் வராது. 
அதிர்ஷ்ட எண்: 7
ரிஷபம் 
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். தன் வாழ்வைவிட உங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். கடமை உணர்வோடு பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம் 
சில விளையாட்டுகள் விளையாடுவதில் ஈடுபாடு காட்டுங்கள். அதுதான் நீடித்த இளமையின் ரகசியம். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். இனிமையான நடத்தையால் குடும்ப வாழ்வு பிரகாசமாகும். சிலர் அன்பான புன்னகையால் ஒரு தனி நபரை சமாளித்துவிடுவர். மற்றவர்களுடன் நீங்கள் நட்பாக இருக்கும்போது நீங்கள் வாசனைமிக்க மலரைப் போல மாறுகிறீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4
கடகம் 
தனிப்பட்ட பிரச்சினைகள் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும். அன்புக்குரியவர் இல்லாமல் நேரத்தைக் கடத்துவது கஷ்டமாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 8
சிம்மம் 
நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கை தான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக அமையும். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி 
உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். இன்றைக்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மீதுதான் கவனம் தேவை சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள். ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். உங்கள் லட்சியங்களை அடைய அருமையான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், இது நல்ல நாள். 
அதிர்ஷ்ட எண்: 5
துலாம் 
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் - அது வேலையில் கவனத்தை பாதிக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள். வேலையை மாற்றுவது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம் 
உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் - ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9
தனுசு 
உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள். வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு வயதில் மூத்தவரின் ஆசி கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். ஆபீசில், இன்று நீங்கள் கூறுவதை அனைவரும் மிக நல்ல முறையில் கேட்பார்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
மகரம் 
பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம் 
உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். புகாருக்கு எந்த வாய்ப்பும் தராதீர்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4
மீனம் 
தேவையற்ற எதையாவது வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். வாக்குவாதத்தால் எதையும் பெறப் போவதில்லை என்றும், சிலதை இழக்கத்தான் செய்வீர்கள் என்றும் நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். உங்கள் வேலையில் இன்று ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம். 
அதிர்ஷ்ட எண்: 1

2018 TopTamilNews. All rights reserved.