darbar
  • January
    17
    Friday

Main Area

Main



எந்த ராசியினர் எல்லாம் கூட்டு தொழில் செய்யவே கூடாது?

ராசிபலன்
ராசிபலன்

 26-08-2019 (திங்கட்கிழமை)

நல்ல நேரம்
காலை 6.15 மணி முதல் 7.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 7.30 மணி முதல்  9 வரை
எமகண்டம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
சந்திராஷ்டமம்
கேட்டை, மூலம்.
பரிகாரம்
தயிர் . 
இன்று ஏகாதசி விரதம்.

மேஷம்
உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுங்குங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும்.  வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4
ரிஷபம் 
சிக்கலான சூழ்நிலையில் அப்செட்டாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். 
அதிர்ஷ்ட எண்: 4
மிதுனம் 
இடையூறான உணர்வுகள் மற்றும் உந்துதல்களை கட்டுப்படுத்துங்கள். பழமையான சிந்தனைகள், பழைய ஐடியாக்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கலாம், வளர்ச்சியை பாதிக்கலாம். மேற்கொண்டு முன்னேற தடையாக இருக்கலாம். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
கடகம் 
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது, உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம். எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5
சிம்மம் 
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். அதே சமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை. அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட எண்: 3
கன்னி 
உணர்வுரீதியாக எளிதில் பாதிக்கப்படுவீர்கள். எனவே நீங்கள் காயப்படக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தள்ளியிருங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். கோபம் உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட எண்: 2
துலாம் 
இன்று உங்களது நிதி நிலைமை மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கையுடன் சில தர்ம காரியங்களிலும் ஈடுபடுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உத்தரவு போட்டால், நெருக்கமானவர்களுடன் பிரச்சினை ஏற்படும். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது. வார்த்தைகளின் மிக அதிகமாக நிதானத்தைக் கடைபிடியுங்கள். எதையும் இருமுறைகளாக யோசித்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 4
விருச்சிகம் 
இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6
தனுசு 
இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள்!
அதிர்ஷ்ட எண்: 3
மகரம் 
இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். கொண்டாட்ட மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதில் ஆனந்தம் கொள்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 3
கும்பம் 
புத்திசாலித்தனமான முதலீடுகளுக்கு தான் பலன் கிடைக்கும். எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள். இன்று சுவாரஸ்யமான சில அழைப்பிதழ்கள் வரும். பொறுமை இழக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
மீனம் 
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். காந்த சக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

2018 TopTamilNews. All rights reserved.