kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


யாருக்கெல்லாம் நல்ல நேரம் கைகூடி வருகிறது?

ராசிபலன்
ராசிபலன்
Loading...

19-08-2019 (திங்கட்கிழமை)
நல்ல நேரம் 
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை
மாலை : 04-45 மணி முதல் 05-45 மணி வரை 
ராகுகாலம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை
சந்திராஷ்டமம் : 
பூரம், உத்திரம்
இன்று
மகா சங்கடஹர சதுர்த்தி

மேஷம் 
பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய சிந்தனைகள் இன்று உதயமாகும். பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பிப்பார். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 6


ரிஷபம் 
ஆரோக்கியத்தை வழங்கும் அற்புதமன நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், திருட்டு ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 5


மிதுனம் 
காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3


கடகம் 
ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் உங்கள் அனைத்து விருப்பங்களும் பூர்த்தியாகும் நேரம் கைகூடி வருகிறது. முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 6


சிம்மம் 
தகராறு பிடித்தவரிடம் வாக்குவாதம் செய்வது உங்கள் மன நிலையை பாதிக்கும். புத்திசாலித்தனமாக இருங்கள். முடிந்தால் அதைத் தவிர்த்திடுங்கள். பகைமையும் படபடப்பும் ஒருபோதும் உங்களுக்கு உதவாது. 
அதிர்ஷ்ட எண்: 5


கன்னி 
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினர் மனதை காயப்படுத்தாமல் தவிர்ப்பதற்காக, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3


துலாம் 
தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5


விருச்சிகம் 
வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். சிறிது காலம் நீங்கள் சொந்தக் காலில் நிற்பது போல தோன்றுகிறது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7


தனுசு 
குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது.  திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். 
அதிர்ஷ்ட எண்: 4


மகரம் 
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகி விடும்.  தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். 
அதிர்ஷ்ட எண்: 4


கும்பம் 
நிதி நிலைமை நிச்சயமாக உயரும். ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எப்போதும் வெற்றி பெற்றவர்களுடன் தொடர்பில் இருங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 2


மீனம் 
உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன் தரும். பார்த்து வரும் வேலைகளில் சங்கடம் இருந்தால், தைரியமாக வேலை மாற்றத்திற்கு முயற்சிக்கும் நேரம் இது.
அதிர்ஷ்ட எண்: 9

2018 TopTamilNews. All rights reserved.