kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


யாருக்கெல்லாம் நிதி நிலைமை மேம்படும்?

ராசிபலன்
ராசிபலன்
Loading...

17.08.2019 (சனிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்
பிற்பகல்  1.30 மணி முதல் 3 வரை
சந்திராஷ்டமம்
ஆயில்யம், மகம்  
பரிகாரம்
தயிர்

இன்று விஷ்ணுபதி புண்யகாலம், ஆவணி மாதப்பிறப்பு 

மேஷம் 
இன்று உங்கள் ராசிக்கு வேலையிடத்தில் மேலதிகாரிகளின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.  
அதிர்ஷ்ட எண்: 1


ரிஷபம் 
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9


மிதுனம் 
இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7


கடகம் 
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்களாஇ செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். 
அதிர்ஷ்ட எண்: 2


சிம்மம் 
இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அது உங்களை பதற்றமாகவும் ஆக்கும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும்.  பேசுவதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9


கன்னி 
தனிப்பட்ட பிரச்சினைகள் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, உடனடி செலவுகளை சமாளிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7


துலாம் 
உங்களின் நிதி நிலைமை மேம்படும். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள்.
அதிர்ஷ்ட எண்: 1


விருச்சிகம் 
மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. 
அதிர்ஷ்ட எண்: 3


தனுசு 
உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும். 
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 
உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். தொழில் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 8


கும்பம் 
உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். நிறைய வாய்ப்புகள் வரும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 6


மீனம் 
 நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மேலும் குழப்பமாகும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. அதனால் கூடுமானவரை பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4

2018 TopTamilNews. All rights reserved.