darbar
  • January
    27
    Monday

Main Area

Mainயாருக்கெல்லாம் கைகளில் பணம் எப்போதும் புரளும்!

பணம்
பணம்

16.08.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம் மாலை 3 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் 
பூசம், ஆயில்யம்
பரிகாரம் 
வெல்லம்

மேஷம் 
யூகிக்க முடியாத உங்களின் இயல்பு, நெருங்கிய உறவை பாதிக்காமல் இருக்கட்டும். இதைத் தவிர்ப்பதை உறுதி செய்யாவிட்டால் பின்னர் வருத்தப்படுவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலைகள் தடைபடும். எந்தவொரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம்.
அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் 
பயணம் செய்ய முடியாதவாறு நீங்கள் பலவீனமாக இருப்பதால் நீண்ட தூர பயணத்தை தவிர்த்திடுங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் உங்களுக்கு சிறிது கவலை தரலாம். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும். 
அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் 
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும்.  வீட்டில் ஏதும் மாற்றங்கள் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். 
அதிர்ஷ்ட எண்: 5

கடகம் 
காதல், நம்பிக்கை, அனுதாபம், பரந்த மனது, விசுவாசம் போன்ற பாசிடிவான உணர்ச்சிகளை உணரும் வகையில் மனதை ஊக்கப்படுத்துங்கள். இந்த உணர்வுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால், எந்த சூழ்நிலையிலும் மனம் தானாகவே செயல்பட ஆரம்பிக்கும். இன்று அதிக செயல்பாடு மற்றும் உயர் அந்தஸ்தான நாளாகும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு கைகளில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் 
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பிரச்சினைகள் குழப்பமாகி முடிவடையும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 7

கன்னி 
மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, நமக்குள்ளே இருப்பது என்பதை உணர்த்துவதால் உங்களைப் போல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.  மனதை விட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள்.
அதிர்ஷ்ட எண்: 5

துலாம் 
உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது. மனிதனின் செயல்கள் ஒலியின் அலைகளைப் போன்றவை. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது.
அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் 
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும். தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும்.  இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். வேலை மாற்றம் ஏற்பட்டால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்! இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.
அதிர்ஷ்ட எண்: 9

தனுசு 
நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும்.
அதிர்ஷ்ட எண்: 6

மகரம் 
இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள்.  நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் 
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சற்று பின்னடைவாக உணர்வீர்கள். சிறிது ஓய்வும், சத்துமிக்க உணவும் உங்கள் சக்தியை அதிகரிக்க நிறைய உதவியாக இருக்கும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.  இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும். நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். 
அதிர்ஷ்ட எண்: 4

மீனம் 
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. 
அதிர்ஷ்ட எண்: 1

2018 TopTamilNews. All rights reserved.