darbar
  • January
    17
    Friday

Main Area

Mainதிருமண வாழ்க்கை யாருக்கெல்லாம் சந்தோஷம் தரும்!

ராசிபலன்
ராசிபலன்

ராசிபலன்  
10-08-2019 (சனிக்கிழமை)
நட்சத்திரம்
கேட்டை நாளை அதிகாலை 3.12 வரை பிறகு மூலம்
நல்லநேரம்
காலை 7.30 முதல் 8 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம்
பகல் 1.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம்
பரணி
பரிகாரம்
தயிர்

மேஷம் 
பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். தேவைப்பட்டால் நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். தன் வாழ்வைவிட உங்களை அதிகம் நேசிக்கும் நபரை இன்று சந்திப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 1


ரிஷபம் 
இன்று பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை நீங்கள் விட்டொழிக்க தயாராக வேண்டிய நேரம் இது.
அதிர்ஷ்ட எண்: 9


மிதுனம்  
மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்7


கடகம் 
திடீரென கிடைக்கும் பண வரவு ஏற்படும். இதுநாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.  வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். 
அதிர்ஷ்ட எண்: 2


சிம்மம் 
உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள். ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9


கன்னி 
உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமண வாழ்வில் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7


துலாம் 
இன்று நடைபெறும் சம்பவங்கள் உங்களுக்கு  அதிகமான கவலை மன அழுத்தம், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் குறை காணும் போக்கை விட்டொழியுங்கள். அது உங்களது நேரத்தை வீணடிக்கும் செயல்.
அதிர்ஷ்ட எண்: 1


விருச்சிகம் 
மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மிகம் தான் சிறந்தது என்பதால் ஆன்மிக உதவியை நாட வேண்டிய நேரம் இது. தியானமும் யோகாவும் உங்கள் மன உறுதியை மேம்படுத்தும். உங்கள் நிதி நிலைமை சீராகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 3


தனுசு 
உங்கள் உணவில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரேன் தலைவலி நோயாளிகள் மதிய உணவை தவறவிடக் கூடாது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் உணர்ச்சிபூர்வ அழுத்தம் ஏற்படும்.  உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9


மகரம் 
மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் மனதில் ஏற்படும்  நோய் தான் காரணமாக இருக்கும். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, அதை நீங்கள் வென்றாக வேண்டும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். மனம் உடைந்து போகாதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 9


கும்பம் 
வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவு கடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். 
அதிர்ஷ்ட எண்: 6


மீனம் 
மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடைபெறும். வாழ்வை இனிமையாக்கை நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.
அதிர்ஷ்ட எண்: 4

2018 TopTamilNews. All rights reserved.