darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



யாருக்கெல்லாம் பணபுழக்கம் கைகளில் புரளும்

பணம்
பணம்

இன்றைய ராசிபலன்கள்
வெள்ளிக்கிழமை
ராகுகாலம்
காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்
பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
நல்லநேரம்
காலை 9.15 மணி  முதல் 10.15 மணி வரை 
மாலை 4.45  மணி முதல் 5.45  மணி வரை
சந்திராஷ்டமம்
புனர்பூசம் நாளை அதிகாலை 4.42 வரை பிறகு பூசம்
பரிகாரம்
வெல்லம்

மேஷம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்கத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக சென்று கொண்டிருக்கும் காரியத்தை இன்று முயற்சிக்கலாம். காரியம் கை கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். 
அதிஷ்ட எண்: 2


ரிஷபம்
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
அதிஷ்ட எண்: 6


மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். அடுத்தவர்களின் அந்தரங்கத்திற்கு நாம் நியாயம் கற்பிக்க முடியாது. நியாயத்தை பேசப் போய் உங்கள் பெயர் கெடும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். 
அதிஷ்ட எண்: 4


கடகம்
பயணங்களால் அலைச்சல் அதிகம் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.  வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். பழைய பிரச்சனைகள் தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7


சிம்மம்
எப்பொழுதும் வெற்றி உங்களை ஆசிர்வதிக்கிறது. பெற்றோரின் ஒத்துழைப்பு உங்களுக்கு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களாலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.
அதிஷ்ட எண்: 9


கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் கிடையாது.
அதிஷ்ட எண்: 8


துலாம்
இன்று உங்கள் கைகளில் பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புதிதாக வரும் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். 
அதிஷ்ட எண்: 3


விருச்சிகம்
சில விஷயங்களில் நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். கடந்து போனதை நினைத்து வருந்திக் கொண்டிருக்காதீர்கள். 
அதிஷ்ட எண்: 1


தனுசு
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயம் உண்டு.
அதிஷ்ட எண்: 3


மகரம்
பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 5


கும்பம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலகட்டம் இது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். 
அதிஷ்ட எண்: 2


மீனம்
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தேவையில்லாமல் வலிய சென்று பிரச்சனைகளில் நீங்களாகவே சிக்கிக் கொள்ளாதீர்கள்.  அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4

2018 TopTamilNews. All rights reserved.