• April
    05
    Sunday

Main Area

Mainஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கிரக நிலைகள் சாதகமாக இருக்கு?

ராசிபலன்
ராசிபலன்

18.02.2020 (செவ்வாய் கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல்  8.45 வரை
மாலை 4.45 மணி முதல்  5.45 வரை
ராகு காலம் 
மாலை 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் 
காலை 9 மணி முதல்  10.30 வரை

மேஷம் 
இன்று அமர்ந்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனதுக்கு பிடித்தமானதை செய்யுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்கள் வீட்டுக் கடமைகளை புறக்கணித்து வருவதால் உங்களுடன் வாழும் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாவார். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். 
அதிர்ஷ்ட எண்:7
ரிஷபம் 
உங்கள் உடல் எடையில் ஒரு கண் இருக்கட்டும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். நண்பர்களும் உறவினர்களும் சாதகமான செயல்கள் செய்வார்கள், அவர்களுடன் இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். 
அதிர்ஷ்ட எண்: 7
மிதுனம் 
கிரக நிலைகளின் படி,  உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
கடகம் 
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின் படி இருக்காது. உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம். உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள். நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும். பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 8
சிம்மம் 
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிதாக எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
கன்னி 
'முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. குடும்ப விவகாரம் மகிழ்வாக இல்லை. இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 5
துலாம் 
உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்.  ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் லட்சியங்களை பெற்றோரிடம் தெரிவிக்க சரியான நேரம். அவர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்களும் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம் 
உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். 
அதிர்ஷ்ட எண்: 9
தனுசு 
இன்று புதிய முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகி விடும். 
அதிர்ஷ்ட எண்: 6
மகரம் 
இன்றைய நாளின் பிற்பகுதியில் உங்களுடைய நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். கூடுமானவரை கடனை தவிர்த்து விடுங்கள். அது உங்களுக்கு லாபத்தைக் கொண்டு வரும். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம் 
உங்கள் குடும்பம் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்கு தான் பலன் கிடைக்கும். எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். உங்கள் காதலரின் உணர்ச்சிகரமான தேவைக்கு அடிபணியாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4
மீனம் 
உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகி விடும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை தொந்தரவு செய்ய துவங்கிவிடுவார்கள்.  பயணங்கள் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். 
அதிர்ஷ்ட எண்: 2

2018 TopTamilNews. All rights reserved.