யாருக்கெல்லாம் கடன்களை அடைக்கும் யோகம் இருக்கு? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainயாருக்கெல்லாம் கடன்களை அடைக்கும் யோகம் இருக்கு?

ராசிபலன்
ராசிபலன்

15.01.2020 - புதன் கிழமை 
தை  திருநாள் 1 

நல்ல நேரம்
காலை 11.30 மணி முதல் 12 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை  7.30 மணி முதல் 9 வரை

mesham

மேஷம்
இன்று உங்களின் அபரிமிதமான முயற்சி மற்றும் உரிய நேரத்தில் குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவால், விரும்பிய பலன்கள் கிடைக்கும். ஆனால், அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நஷ்டம் நிச்சயம்.  இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 4

rishabham

ரிஷபம்
புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. இன்று நீங்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவுகள் உங்களது வளர்ச்சிக்கு புதிய ஐடியாக்களைத் தரும்.
அதிர்ஷ்ட எண்: 3 

midhunam

மிதுனம்
நீண்டகாலமாக இருந்து வரும் நோயில் இருந்து விடுபடுவீர்கள். கூடுமானவரை உங்களது முன்கோபத்தைத் தவிர்த்திடுங்கள். சாதாரண பிரச்சனையைக் கூட உங்களது முன்கோபம் பெரிதாக்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 1 

kadagam

கடகம் 
நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கப் பாருங்கள். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 5 

simmam

சிம்மம் 
மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள். குடும்ப பிரச்சினையை தீர்க்க குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நடத்தை முக்கிய பங்காற்றும். 
அதிர்ஷ்ட எண்: 3 

kanni

கன்னி
இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல், உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய ஏதாவது வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட எண்: 2 

thulam

துலாம் 
உடல் நலன் என்று வரும்போது உங்களை கவனிக்காமல் இருந்து விடாதீர்கள். புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும், சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 4 

viruchagam

விருச்சிகம்
உடல்நலம் குறித்த பிரச்சினைகள், அசெளகர்யத்தை ஏற்படுத்தலாம். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்படும் தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். முடிந்தவரை வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.  ஏனெனில் உங்கள் ராசிக்கு, நீங்கள் பேசும் சொற்கள் உங்களது நிலைமையை மேலும் மோசமாக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6 

dhanusu

தனுசு 
இன்று உங்கள்  உடல்நலம் சரியாக இருக்கும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். இன்று மாலையில் விருந்தினர்களின் வருகை உற்சாகத்தைத் தரும். 
அதிர்ஷ்ட எண்: 3 

makaram

மகரம்
பலன் தரக் கூடிய நாள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் இன்று மாலை உங்கள் கவனத்தை ஈர்ப்பார். எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்று, நீங்கள் இதுவரை  எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். பயணம் பலன் தரும், 
அதிர்ஷ்ட எண்: 3 

kumbam

கும்பம்
உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்களுக்கு வேலையில்லாத நேரத்தை தன்னலமற்ற சேவைக்கு ஒதுக்குங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அதிகமான ஆனந்தத்தையும் தரும். 
அதிர்ஷ்ட எண்: 9 

meenam

மீனம்
சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.  பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும். மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். செல்வங்கள் சேர்ந்து கடன்கள் செட்டிலாகும் காலம் இது.
அதிர்ஷ்ட எண்: 7

2018 TopTamilNews. All rights reserved.