• February
    21
    Friday

Main Area

Mainஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தொழிலில் வெற்றி கிடைக்கும்?

ராசிபலன்
ராசிபலன்

(13-01-2020) திங்கள்கிழமை
ராகுகாலம் காலை 7.30 மணி முதல் 9 வரை
எமகண்டம் காலை 10.30 மணி  முதல் 12 வரை
நல்லநேரம்
காலை 6.15 மணி முதல் 7.15 வரை
மாலை 4.45 மணி  முதல் 5.45 வரை

மேஷம் 
பொறுமை தான் ரொம்பவும் முக்கியம் என்கிறது உங்களுக்கான இன்றைய ராசிபலன். உங்கள் பணியில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம். தடைப்பட்டு நிற்பீர்கள். உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உங்கள் வெற்றி உங்களை விட்டு எங்கும் சென்றுவிடாது.

ரிஷபம் 
யார் என்ன சொன்னாலும், அந்த கருத்தைக் கேட்டு உங்களது மனசாட்சியின் படி முடிவெடுங்கள். அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவரால் வாழ முடியாது. இன்று உங்கள் முடிவுகள் தவறானாலும், வேறொரு சரியான நாளுக்காக காத்திருங்கள். பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் நிலவினாலும், விரைவில் சரியாகும். 

மிதுனம்
மனரீதியாக இன்று யாராவது உங்களை காயப்படுத்தக் கூடும். ஆனாலும், உங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் நண்பர்களின் வார்த்தை உங்களுக்கு ஆதரவாக இருக்கும். கவலை வேண்டாம்.

கடகம் 
வெற்றி நீங்கள் நெருங்கும் தூரத்தில் தான் இருக்கிறது. உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இன்று ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் கூட தொலைபேசியில் பேசி உங்களது பழைய உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசும் நேரம் வந்து விட்டது. இனி  புகழ் வெளிச்சம் உங்கள் மேல் படரும்.

சிம்மம்
செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம். நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஊதாரித்தனமாக செலவுகளை செய்வீர்கள். அது உங்களை மட்டும் பாதிக்காது. உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் என்பதை மறக்க வேண்டாம். அதற்கு இடம் கொடுக்காமல், உங்களுக்கான தனி வழியில் எப்போதும் போல இயங்குவீர்கள். பெற்றோரிடம் அன்பு கொள்ளுங்கள்.

கன்னி 
யாருடைய பேச்சையும் கேட்க மாட்டீர்கள். அதனால் சில பிரச்சனைகள் உருவாகலாம். நீங்கள் இந்த தருணத்தில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. உங்களது செயல்பாடு என்னவாக இருக்கப் போகிறது, உங்களது திட்டம் என்ன என்பதை கூட யாராலும் கிரகிக்க முடியாது. உங்களை நீங்களே புரிந்து கொண்டால் தான் உண்டு.

துலாம் 
இன்றைய தினம் உங்களுக்கு முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களை மட்டுமே வழங்கப் போகிறது. உங்களுக்கு என்று எவ்வளவு போதனைகள் செய்தாலும், உங்கள் வழியில் நிற்காமல் சென்றுக் கொண்டே இருப்பீர்கள். குழந்தைகளால் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் துவங்குவதற்கான நேரம் இதுவல்ல. ஒரு மாதம் தள்ளிப் போடுங்கள்.

விருச்சிகம்
உங்களுக்கு தொழில் செய்வதற்கான கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. செய்யும் தொழிலில் வெற்றி தேவதை நிச்சயமாக உங்களை ஆசிர்வதிப்பாள். விடாமுயற்சியால் நிச்சயம் வெற்றியை நெருங்கி விடுவீர்கள். சில சமயங்களில் உங்களது இரண்டாம் கட்ட திட்டங்கள் வெற்றிப் பெறும். அவை உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பீர்கள்.

தனுசு 
உங்களுக்கான வளமான கட்டமைப்பை உருவாக்கும் எண்ணம் உங்களிடம் அதிகரிக்கும். இதுவரை மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் தடைப்பட்டுக் கொண்டே போனதே என்று கவலைப்படாதீர்கள். இந்த ஆடி உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அழைத்து வருகிறது.

மகரம் 
சுயநலமான போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உலகம் நமக்காக மட்டுமே இயங்கவில்லை. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வினையாற்றுங்கள். உங்களது தனிப்பட்ட சிந்தனைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதே இப்போது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு விஷயம் சிறப்பாக செயல்படாத போது அங்கேயே நீங்கள் தடைப்பட்டு நிற்க வேண்டாம்.

கும்பம் 
புதிய மாற்றங்களுக்காக அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். கூடிய விரைவில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் கேட்டும் கூட வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வாய்ப்பு கிடைக்காத உங்களுக்கு, இந்த தருணங்கள் படிப்பினை கொடுக்கும்.

மீனம் 
மறந்தும் கூட ஒரு தவறான அடியை எடுத்து வைக்க மாட்டீர்கள். அவ்வளவு துல்லியமாகவும், நேர்மையாகவும் உங்களை பணியை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எது சரியென படுகிறதோ, அதைச் செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது கூடுதல் பிளஸ்.

2018 TopTamilNews. All rights reserved.