• February
    21
    Friday

Main Area

Mainஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நல்ல காலம் தொடங்க போகுது தெரியுமா?

ராசிபலன்
ராசிபலன்

08.01.2020 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை  7.30 மணி முதல் 9 வரை
 

மேஷம் 
இன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசவுகரியமாக்கும் வகையில் பல சம்பவங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 
பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக சிந்தித்து பேசுங்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். இன்று உங்களுக்கு மனம் வருத்தப்படும் படியான சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. கவனமாக கடக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் 
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி சிலர் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்களை ரிலாக்ஸ் செய்யும்.  அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 8

கடகம் 
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். இடைவிடாத வேலை நிறைந்த நாளிலும் சக்தியை சேர்த்துக் கொள்ள உங்களால் முடியும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். தேவைப்பட்டால் நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் 
சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் லாபமாகவே இன்றைய நாள் இருக்கும்.உங்கள் வாழ்வின் முன்னேற்றம் ஆரம்பமாகத் தொடங்கி விட்டது. ஆனால் சில உடல் நல கோளாறுகள் தோன்றும். எச்சரிக்கையாக இருங்கள். கூடுமானவரை வெளியிடங்களில் உணவு எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்! 
அதிர்ஷ்ட எண்: 1

கன்னி 
ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். உங்கள் குழந்தைகளின் விஷயங்களில் ஆதரவு அளிப்பது அவசியம். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமாக வார்த்தைகளை உச்சரித்து விடாமல் கவனமாக இருங்கள்!
அதிர்ஷ்ட எண்: 8

துலாம் 
மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும். ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். 
அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 
உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பதை அறிவீர்கள். ஆனால் பேசுவதில் கவனமாக இருங்கள். நீண்டகால அடிப்படையில் ஆதாயம் தரும் முடிவுகளை எடுத்திடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும். தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். தொலை தூரத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். அந்த தொடர்பு லாபகரமானதாக இருக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும்.  இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருங்கள். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால பயன் தரும்.
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வீட்டை அழகுபடுத்துவதுடன், குழந்தைகளின் தேவைகளையும் கவனியுங்கள். வீடுகளில் ஊக்கத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை சேர்ப்பது குழந்தைகள் தான். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். 
அதிர்ஷ்ட எண்: 7

மீனம் 
சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை இன்று தவிர்க்க வேண்டும். சிலர் உங்களிடம் காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் தொடர்பாக நீங்களே முடிவு எடுங்கள். பலன்களை அறுவடை செய்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும்.
அதிர்ஷ்ட எண்: 5

2018 TopTamilNews. All rights reserved.