• February
    21
    Friday

Main Area

Mainஎந்த ராசிகாரர்களுக்கெல்லாம் தொழிலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!

ராசிபலன்
ராசிபலன்

07-01-2019 (செவ்வாய்க்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.30 மணி முதல் 8.00 வரை 
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம்
காலை   9 முதல் 10.30 வரை
 

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு அதிக பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 8


ரிஷபம் 
உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு, நேரத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7


மிதுனம் 
உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின் படி இருக்காது. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 5


கடகம் 
வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள். எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள்.  தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 9


சிம்மம் 
உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 7


கன்னி 
உடல் நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5


துலாம் 
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள்.  இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
அதிர்ஷ்ட எண்: 8


விருச்சிகம் 
அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். தொழில் செய்வதற்கு ஏற்கி கிரக அமைப்பு கூடி வருகிறது. உங்களுக்கு அனுபவம் இருக்கின்ற தொழிலில் தைரியமாக இறங்கலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1


தனுசு 
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7


மகரம் 
இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். 
அதிர்ஷ்ட எண்: 7


கும்பம் 
பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 4


மீனம் 
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். புதுமனை புகுவிழாவுக்கு உகந்த நாள். 
அதிர்ஷ்ட எண்: 2

2018 TopTamilNews. All rights reserved.