• February
    21
    Friday

Main Area

Mainஇந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்!

ராசிபலன்
ராசிபலன்

26.12.2019 (வியாழன்)

வளைய சூரிய கிரகணம்  ​​​​​​: காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரை


நல்ல நேரம்
காலை 11.15 மணி முதல் 12 வரை
ராகு காலம்
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை
எமகண்டம்
காலை 6 மணி முதல் 7.30 வரை

மேஷம்
நம்பிக்கையும் சக்தியும் இன்று அதிகமாக இருக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பதை அறிவீர்கள். ஆனால் பேசுவதில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
ரிஷபம்
இன்று உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நண்பர் பக்கத்தில் இல்லாததால் அவர்களின் அருமையை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
மிதுனம்
அளவுக்கு மிஞ்சிய உற்சாகமும், பேரார்வமும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இதைத் தவிர்க்க உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும்   'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 9
கடகம்
வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் சக்தி குறைந்திடும். வேகமாக முடிவு எடுக்காதீர்கள். குறிப்பாக முக்கியமான நிதி நிலைகளைப் பற்றி முடிவு எடுக்கும் போது அவசரப்படாதீர்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும்.
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம்
ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நீங்கள் ஒரு நல்லதை செய்யும்போது காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 2
கன்னி
மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். டென்சன் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்:9
துலாம்
வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
விருச்சிகம்
நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு
ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு உடனடி செலவுகளை சமாளிக்கும். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும்.  தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட எண்: 1
மகரம்
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். உறவினர்களுடன் செலவிடும் நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே புதிய விஷயங்களுக்கான முயற்சியைத் தொடங்குங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
கும்பம்
உங்கள் உணவில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரேன் தலைவலி நோயாளிகள் மதிய உணவை தவறவிடக் கூடாது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் உணர்ச்சிபூர்வ அழுத்தம் ஏற்படும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள்.  ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்:8
மீனம்
இன்று உங்களது நிதி நிலைமை நிச்சயமாக உயரும். ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். காதல் விவகாரம் பற்றி பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டாம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும்.  
அதிர்ஷ்ட எண்: 6

2018 TopTamilNews. All rights reserved.