Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும்

இன்றைய ராசிபலன்
(10-9-2020)வியாழக்கிழமை
ராகுகாலம்
பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
நல்லநேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மேஷம்


பொறுமை தான் ரொம்பவும் முக்கியம். உங்கள் பணியில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம். சில காரியங்கள் தடைப்படலாம். அதனால் உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உங்கள் வெற்றி உங்களை விட்டு எங்கும் சென்றுவிடாது.

ரிஷபம்


உங்களது மனசாட்சியின் படி முடிவெடுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் நிலவினாலும், விரைவில் சரியாகும்.

மிதுனம்


மனரீதியாக இன்று யாராவது உங்களை காயப்படுத்தக் கூடும். ஆனாலும், உங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். உங்கள் நண்பர்களின் வார்த்தை உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

கடகம்


வெற்றி நீங்கள் நெருங்கும் தூரத்தில் தான் இருக்கிறது. உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள இன்று உங்களுக்கு அற்புத வாய்ப்பு கிடைக்கும்.வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசும் நேரம் வந்து விட்டது. அதனால் உங்கள் பொருளாதார நிலைமை மேம்படும்.

சிம்மம்


நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கும். செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம். பெற்றோரிடம் அன்பு கொள்ளுங்கள். அவர்களின் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள். சரியான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி


யாருடைய பேச்சையும் கேட்காமல் இருப்பதால் சில பிரச்சனைகள் உருவாகலாம். ஆனால் அதெல்லாம் சிறிது நேரத்தில் மறைந்து போகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தை தவிர்க்கலாம்.

துலாம்


இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையலாம். குழந்தைகளால் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் துவங்குவதற்கான நேரம் இதுவல்ல. ஒரு மாதம் தள்ளிப் போடுங்கள். தாய்வழி உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

விருச்சிகம்


விடாமுயற்சியால் நிச்சயம் வெற்றியை நெருங்கி விடுவீர்கள். மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் இன்று. உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த பாதக நிலை மாறும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு


இதுவரை மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் தடைப்பட்டுக் கொண்டே போனதே என்று கவலைப்படாதீர்கள். சீக்கிரம் நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணத்தட்டுபாடு விலகும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள்

மகரம்


உங்களது தனிப்பட்ட சிந்தனைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதே இப்போது உங்களுக்கு நல்லது. தோல்வியால் நீங்கள் தடைப்பட்டு நிற்க வேண்டாம். அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும்.

கும்பம்


புதிய மாற்றங்களுக்காக அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள்.

மீனம்


இன்றைய நாள் துல்லியமாகவும், நேர்மையாகவும் உங்களை பணியை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எது சரியென படுகிறதோ, அதைச் செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள். குடும்பத்தினர்களுடன் இன்றைய நாளை அமைதியாக கழிப்பீர்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். ஆனால்...

தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா...

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா புலம்பிவருகிரார். அதேபோல் அதிமுக...

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...
TopTamilNews