எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்!

தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். 

இன்றைய ராசிபலன்

10-6-20220  (புதன்கிழமை)
நல்லநேரம்
காலை 9.15முதல் 10.15 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை 7.30 முதல் 9 வரை
மேஷம்
இன்று உங்களுக்கு சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்!

ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மிதுனம்
இன்று எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கடகம்
தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்
வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னி
சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும்.

துலாம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் போது வார்த்தைகளில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்
தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு
இன்று உங்களுக்கு மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள்.

மகரம்
புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்
மகிழ்ச்சியும் உற்சாகமுமான நாளாக இன்று உங்களுக்கு இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.

மீனம்
எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

Most Popular

மதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. அதற்காக ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 15,810 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இன்று மாலை பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் இன்று மாலை பாஜகவில் இணைகிறார். சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும்...

“குற்றவாளியை சகோதரனாக்கிய கோர்ட்”- பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொண்டார்..

ஏப்ரல் 20 ஆம் தேதி, மத்தியப்பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைனில் உள்ள 30 வயதான பெண்ணின் வீட்டிற்குள் வன்கொடுமை செய்ய நுழைந்ததாக பக்ரி மீது குற்றம் சாட்டப்பட்டு,அவரின் வழக்கு நடைபெற்று வருகிறது ,இப்போது அவர்...