Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களெல்லாம் இனி இனிமையான வாழ்வை தொடங்குவீர்கள்!

எந்த ராசிக்காரர்களெல்லாம் இனி இனிமையான வாழ்வை தொடங்குவீர்கள்!

இன்றைய ராசிபலன்
27-08-2020 (வியாழக்கிழமை)
நல்லநேரம்
காலை 10.45 முதல் 11.45 வரை
ராகுகாலம்
பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம்
காலை 6 முதல் 7.30 வரை

மேஷம்


இன்று வழக்கத்தைவிட சக்தி குறைவாக இருப்பதை உணர்வீர்கள். கூடுதல் வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.

ரிஷபம்


உங்களை நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். உங்கள் கண்ணீரை நண்பர்கள் துடைப்பார்கள். பாசிடிவ் சிந்தனையுடன் கூடிய நன்னெறிகளால் வேலையிடத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் நன்னெறிகளால் திருப்தி கிடைக்கும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும்.

மிதுனம்


இன்று உங்களுக்கு புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் வந்து மாலை நேரத்தை அற்புதமானதாக ஆக்குவார்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.

கடகம்


சிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் – உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது. குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். வேலை செய்யும் இடத்தில் சீனியர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு அதிகரிக்கும்.

சிம்மம்


பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம். உங்கள் நகைச்சுவை உணர்வால் சிலர் காயப்படலாம். பேச்சில் கவனம் தேவை. தற்காப்பை கடைபிடியுங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.

கன்னி


பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு ஏற்படலாம் . கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை உணரும் நாள் இது.

துலாம்


உங்களின் அதீத நம்பிக்கை உங்களுக்கு வெற்றியை தரும். வீட்டில் நிலுவையாக உள்ள வேலைகளை முடிக்க துணைவருடன் சேர்ந்து ஏற்பாடுகள் செய்யுங்கள். இதுவரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனி இனிமையான வாழ்வை தொடங்குவீர்கள்.

விருச்சிகம்


பலன் தரக் கூடிய நாள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். காதலில் மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறுவீர்கள். நீங்கள் செய்த ஒரு நற்செயலால் இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள்.

தனுசு


உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும். ஏதோ ஒரு வகையில் இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும்.

மகரம்


உங்கள் பொருளாதார நிலைமை மேம்படும். கெட்ட பழக்கங்களால் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களிடம் இருந்து விலகியிருங்கள். புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். வியாபாரிகளுக்கு அதிக லாபத்தை தரக்கூடிய நாளாக இது அமையும்.

கும்பம்


உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவது தான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

மீனம்


உங்களின் இயல்பு மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். நிதி நிலைமை மேம்படும். காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். பெண்களுக்கு நிம்மதி மற்றும் மன நிறைவை கொடுக்கும் நாள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு,...

மோடி நாடு கடத்தல் வழக்கு… நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

மும்பையிலுள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் இந்த மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்குத்...

டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த விசைத்தறி தொழிலாளி… போலீசார் விசாரணை…

கோவை கோவை அருகே விசைத்தறி தொழிலாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி...

கனிம வளங்கள் எடுக்க புதிய டெண்டர்… இடைக்கால தடைவிதித்து உத்தரவு!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கான, புதிய டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்...
TopTamilNews