Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வாக்குறுதி தருவதற்கு முன் யோசிப்பது நல்லது!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வாக்குறுதி தருவதற்கு முன் யோசிப்பது நல்லது!

மேஷம்

இன்று மகிழ்ச்சியான நாளாக இன்று அமையும். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது. பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும்.

ரிஷபம்

பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள்.

மிதுனம்

உங்கள் நடத்தையால் பகைவர்களின் பட்டியல் நீளும். உங்கள் கோபத்தை கட்டுபடுத்தி கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் முரட்டுதனமாக நடக்காதீர்கள்! அது அமைதியைக் கெடுக்கும்.

கடகம்

உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். அதிகமான நேரத்தையும், பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள்.

கன்னி

இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணைவரிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

துலாம்

உங்கள் தொடர் முயற்சியால் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், உங்களுக்கு கிடைத்துள்ள விடுமுறை வேறு விஷயங்களுக்கான திட்டமிடலுக்கும் நல்லது.

விருச்சிகம்

உங்களுக்கு இருந்த நீண்டகால பயம் இன்று உங்களை விட்டு அகலும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். நிதி நிலைமை மேம்படும்.

தனுசு

எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் வீட்டில் உள்ளவர்களுடன் கலந்து பேசுங்கள். பேச்சில் கவனமாக இருங்கள். தாய் வழி உறவினர்களால் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்கும்.

மகரம்

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் . எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் நினைத்ததைவிட நல்லதாக இருக்கும்.

கும்பம்

உங்கள் மன கவலை உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். தோல் பிரச்சினை ஏற்படலாம். நண்பர்களும் உறவினர்களும் சாதகமான செயல்கள் செய்வார்கள், அவர்களுடன் இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்

குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீடு பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

திண்டுக்கல் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகேயுள்ள...

பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகினர்!

பாலிவுட் நடிகர் ராகுல் ராய் உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 52. பாலிவுட் இயக்குநர் மகேஷ்...

கேரளாவிற்கு செல்ல அனுமதி: குமுளியில் கடைகள் திறப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக- கேரள எல்லைப்பகுதியான குமுளி மூடப்பட்டிருந்தது. படிப்படியாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது கேரள அரசு இந்த உத்தரவை திரும்பப்பெற்ற நிலையில் டோக்கன் பெறுதல், இபாஸ் சோதனை...

’இலங்கையில் கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு?’ சுகாதார அமைச்சர் தகவல்

கொரோனா உலகம் முழுவதுமே பெரும் அச்சத்தை விளைவித்து வருகிறது. நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6...
Do NOT follow this link or you will be banned from the site!