Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மன கவலைகள் அதிகரிக்கும்!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மன கவலைகள் அதிகரிக்கும்!

நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான தினமாக அமையும்.

இன்றைய ராசிபலன்
16-08-2019 (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 3.15 முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல் 12 முதல் 1.30 வரை

மேஷம்

mesham ttn card

உங்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உங்கள் மனதில் புதிய தெளிவு பிறக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் இருந்து பணம் நிச்சயம் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். செலவுகள் அதிகரித்தாலும் அதை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் நஷ்டம் நிச்சயம் இருக்காது. பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

ரிஷபம்

rishabam ttn card

உங்களுக்கான மன கவலைகள் அதிகரிக்கும். பொருளாதார சூழலில் மந்த நிலை காணப்படும். பணத்தேவை இருந்தும் அது கைக்கு கிட்டாததால் மனச்சோர்வை அடைவீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும் முடிந்தவரை இறைவழிபாட்டில் கவனம். அவர்களைப் பொறுத்தவரையில் புதிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பெண்கள் கூடுதலான குடும்பப் பொறுப்பை சுமப்பதால் கலக்கம் அடைவீர்கள்.

மிதுனம்

midhunam ttn card

உங்கள் ஆலோசனைகளை உங்கள் குடும்பத்தினர் ஏற்க தொடங்குவார்கள். நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க உதவி நிச்சயம் உங்களை தேடி வரும். திருமணமாகாத ஆண் பெண் எவராயினும் அவர்களுக்கு திருமண யோகம் கிட்டும் காலமிது. வியாபாரிகளை பொறுத்தவரையில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் நாள்.

கடகம்

kadakam ttn card

தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். வீண் செலவுகள் குறையும். வியாபாரத்தை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் வழக்கம்போல் காணப்படும். பெண்கள் மிக எளிதாக செலவுகளை சமாளிப்பார்கள்.

சிம்மம்

simmam ttn card

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். பழைய கடன் விஷயத்தில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் .உங்கள் தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தை பொருத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான தினமாக அமையும்.

கன்னி

kanni ttn card

இன்றைய நாள் உங்களுக்கு சுமாரானதாக அமையும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். உங்கள் பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிடைக்கும். இல்லத்தரசிகள் எதிர்பார்த்த பண உதவி நிச்சயம் கிடைக்கும்.

துலாம்

thulam ttn card

இன்று உங்களுக்கு நடக்கும் அனைத்தும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி நிச்சயம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரிகள் உங்களிடம் ஆலோசனை பெற காத்திருக்கும் சூழல் ஏற்படும். பெண்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் நாள் இது.

விருச்சிகம்

viruchigam ttn card

உங்கள் பொருளாதார நிலைமை சீராக இருக்கும் பணவரவு அதிகமாக காணப்படும். உடல்நலம் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும். இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வியாபாரிகளை பொருத்தவரையில் தொழிலை இரட்டிப்பாக்கும் சூழலும் அமையலாம். பெண்கள் இறைவழிபாட்டில் மனதை செலுத்துவார்கள்.

தனுசு

dhanusu ttn card

நீங்கள் தொடங்கும் செயல்கள் பல்வேறு தடைப்பட்டு தாமதமாகவே நடந்து முடியும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வரவை விட செலவு அதிகமாக உள்ளது என்ற கவலை உங்களை வாட்டி வதைக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். பெண்கள் மன சோர்வை அடைவார்கள்.

மகரம்

magaram ttn card

உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள் இது. உங்கள் பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரிகள் வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். பெண்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

kumbam ttn card

இன்று எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நல்ல தகவல்கள் உங்களை வந்து சேரும் சகோதரர்கள் வீண் பிரச்சினை செய்வார்கள், அவர்களுடன் விவாதத்தை தவிர்ப்பது நல்லது . வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் அமோகமாக கிடைக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்

மீனம்

meenam ttn card

எதிர்பார்த்த செய்தி உங்கள் வீடு தேடி வரும் செலவுகள் அதிகமாவதால் உங்கள் சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உங்கள் உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். அதை மறுக்க முடியாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் மிகவும் சோர்வாகவும் ஒரு சில உபாதைகள் உடனும் காணப்படுவீர்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னரே பரப்புரையை...

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் விலக்கு கோரி, லாரி உரிமையாளர்கள் மனு

தேனி லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து தளர்வு அளிக்கக் கோரி, தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனரக வாகன உரிமையாளர்கள் கோரிக்கை மனு...

அரசியலில் 2வது இன்னிங்ஸ்: நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைகிறார்

நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறார். காங்கிரசில் இருந்து விலகிய அவர் நாளை சிவசேனா கட்சியில் இணைகிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன்...

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல்!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானிலை அறிக்கையை தன்னிச்சையாக வெளியிட்டு இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்...
Do NOT follow this link or you will be banned from the site!