Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். தாயின் உடல் நலனில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்

இன்றைய ராசிபலன்கள்
05-08-2020 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரையில்
மாலை 4.45 முதல் 5.45 வரையில்
ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில்
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 வரையில்

மேஷம்

mesham ttn card

 

உங்கள் தந்தையின் விருப்பப்படி நடந்து அவரின் ஆசியைப் பெறுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவு நிச்சயம் வரும். வியாபாரிகளை பொறுத்த வரையில் விற்பனை மந்த நிலையில் காணப்படும்.

ரிஷபம்

rishabam ttn card

செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு கிட்டும். தேவையற்ற சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். நீங்கள் எதிர்பார்க்கும் நற்செய்தி உங்களை வந்து அடைய சற்று தாமதமாகலாம். பெண்களைப் பொறுத்த வரையில் இன்று சோர்வாக காணப்படுவீர்கள்

மிதுனம்

midhunam ttn card

இன்றைய நாள் உங்களுக்கு ஒரு தெளிவும் உற்சாகமும் பிறக்கும். உங்களுக்கு நண்பர்களால் பல நன்மைகள் வந்து சேரும் .வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்கும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்

கடகம்

kadakam ttn card

உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் துவங்கும் செயல்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் இருந்த மனக் கஷ்டங்கள் நீங்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும்.

சிம்மம்

simmam ttn card

நீங்கள் எதிர்பார்த்த உதவி உங்களை வந்து அடையும். உங்களுடைய ஆலோசனையை உங்களது குடும்பத்தினர் கேட்டு தெளிவு பெறுவார்கள். பணியிடத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.

கன்னி

kanni ttn card

இன்றைய நாள் உங்கள் மனதிலும் உடலிலும் சோர்வு ஏற்படலாம். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யும் காரியங்களை திட்டமிட்டு செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் செய்யும் வேலைகளில் தவறை உங்களால் தவிர்க்க முடியும். வியாபாரிகளை பொருத்த வரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை விட பலன் கிடைக்கும்.

துலாம்

thulam ttn card

உங்கள் சேமிப்பில் பணம் இருந்தாலும் அதை விட செலவு அதிகரிக்கும். கடன் விஷயத்தில் கவனமாக இருங்கள். இப்போதைய சூழலில் புதிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டாம். இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம்.

விருச்சிகம்

viruchigam ttn card

இன்றைய நாள் உங்களுக்கு வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும் . நிதானமாக செயல்படுவது நல்லது உங்களது நண்பர்கள் உங்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அத்துடன் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும்.

தனுசு

dhanusu ttn card

முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலைகளை தள்ளி போடாமல் இன்றே செய்து முடித்து விடுங்கள். உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். தாயின் உடல் நலனில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்

மகரம்

magaram ttn card

உங்களிடம் பணம் இல்லை என்று தெரிந்தும் உங்கள் சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சில மன சங்கடங்கள் இன்றைய நாள் வந்து விலகும். புதிய முயற்சிகள் சாதகமாகலாம். சிலருக்கு வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

கும்பம்

kumbam ttn card

குடும்பத்தினருடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். அதை கண்டு பயப்படாதீர்கள் தேவை ஏற்பட்டால் மட்டும் மருத்துவரிடம் செல்லுங்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வியாபாரிகளை பொருத்தவரை லாபம் இரட்டிப்பாகும்.

மீனம்

meenam ttn card

இன்றைய நாள் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதில் வெற்றி காணும் வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இன்று.

மாவட்ட செய்திகள்

Most Popular

“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” : ராகுல் காந்தி பேச்சு!

தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது என்று எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரோட்டில்...

“ஒண்ணா வேலை செய்யறோம்னு சொல்லியே உடம்ப புண்ணாக்கிட்டிங்களே” -கூட வேலை செய்யுறவங்களால் குதறப்பட்ட பெண்

மத்தியப் பிரதேசத்தின் சட்னா மாவட்டத்தில் கொல்கவன் பகுதியில் ஒரு 25 வயதான பெண் தன்னுடைய விதவை தாயுடன் தனியே வசித்து வருகிறார் .அந்த பெண்...

‘திமுக கூட்டணியில் கமல் ஹாசன்’ – அழைக்கும் காங்கிரஸ்; அமைதி காக்கும் ஸ்டாலின்

கமல் ஹாசன் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற...

கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ரயில் மோதி உயிரிழப்பு

திருச்சி திருச்சி அருகே கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!