எந்த ராசிக்காரர்களெல்லாம் இன்று அமைதியோடு இருக்க வேண்டும்…!!

 

எந்த ராசிக்காரர்களெல்லாம் இன்று அமைதியோடு இருக்க வேண்டும்…!!

03.06.2020 புதன்கிழமை
நல்ல நேரம்
காலை 9 மணி முதல் 10 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை 7.30  மணி முதல் 9 வரை

மேஷம்
மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். காதல் மன நிலையில் இருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.
அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம்
நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.  எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு விசாரிக்கவும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். அவர்கள் நெருக்கடியில் இருக்கலாம், உங்களின் அன்பும் புரிதலும் அவர்களுக்குத் தேவைப்படலாம். சிலர் உங்களிடம் காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம்
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதே சமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

கடகம்
உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம்
திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினர் – குழந்தைகள் மறறும் நண்பர்களுடன் செலவிடும் நேரம், உங்கள் சக்தியை புதுப்பிக்க முக்கியமானதாக இருக்கும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1

கன்னி
உங்களின் அணுகுமுறை உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்த்திடும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அதிர்ஷ்ட எண்: 9

துலாம்
திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம்
இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று நண்பர் பக்கத்தில் இல்லாததால் அதன் அருமையை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4

தனுசு
உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நாளின் பிற்பகுதியில் ரிலாக்ஸ் பண்ணுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1

மகரம்
தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் சில சங்கடம் இருக்கும். ஆனால் உங்கள் மன அமைதியை அது கெடுத்துவிட அனுமதித்து விடாதீர்கள். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம்.
அதிர்ஷ்ட எண்: 1

கும்பம்
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். உங்கள் பணத்தைக் கையாள உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8

மீனம்
சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடனமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிக்கற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது.
அதிர்ஷ்ட எண்: 5