எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவுகள் அதிகரிக்கும்!

வியாபாரிகளை பொருத்தவரையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது இருப்பினும் முயற்சியை கைவிட வேண்டாம்.

இன்றைய ராசிபலன்
(07-07-20 ) செவ்வாய்கிழமை
நல்ல நேரம் காலை 07.45 மணி முதல் 08.45 வரை
பிற்பகல் 01.45 மணி முதல் 02.45 வரை
ராகு காலம் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் காலை 09.00 மணி முதல் 10.30 வரை

மேஷம்

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார நிலைமை மேம்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது இருப்பினும் முயற்சியை கைவிட வேண்டாம்.

ரிஷபம்

பொருளாதார வசதி குறைவில்லை என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் நீண்டகால நண்பரை சந்திப்பீர்கள். உறவினர்களிடம் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகளை பொறுத்தவரையில் புதிய முதலீடுகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

ஆரோக்கியம் மேம்படும். செலவுகள் குறையும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். குலதெய்வ வழிபாடு நல்லது. நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த நல்ல செய்தி உங்கள் வீடு தேடி வரும். வியாபாரிகளை பொறுத்தவரையில் மேம்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கலாம்.

கடகம்

பொறுமை மிக மிக அவசியம். பணவரவில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளை பொறுத்த வரையில் வாடகை இடத்தில் இருப்பவர் சொந்த இடத்திற்கு மாற வாய்ப்புண்டு.

சிம்மம்

தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். அரசாங்கம் மூலம் கிடைக்கும் உதவிகள் விரைவில் வந்து சேரும். வீண் செலவுகள் இருக்காது. உங்கள் பிள்ளைகள் மூலம் பணவரவு கிட்டும். வியாபாரத்தை பொறுத்தவரையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

எதிர்பாராத பணவரவு கிட்டும். உறவினர்களின் வருகையால் பிரச்சினைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் மற்ற வியாபாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள்.

துலாம்

எதிர்பாராத பயணங்களால் அசதி உண்டாகும். உங்களது நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு மீண்டும் உங்களிடம் வந்து சேர்வார்கள். தந்தையின் உடல்நலத்தில் ஆரோக்கியம் மேம்படும். செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கான வரவு இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளை பொருத்தவரை சக வியாபாரிகளிடம் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிகம்

கடன் வாங்காமல் அத்தியாவசிய தேவைகளை சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் ஏற்படும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். வீட்டில் நல்ல காரியங்கள் எளிமையாக நடைபெறும். வியாபாரிகளை பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வீண் செலவுகள் ஏதும் ஏற்படாது. மற்றவருடன் பேசும் போது பொறுமை மிக அவசியம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்ப வாழ்க்கை சுமுகமாக செல்லும். வியாபாரிகளை பொறுத்தவரையில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டும்.

மகரம்

பொருளாதார நிலைமை மந்தமாக இருப்பதால் கையிருப்பு கரைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். அதனால் பொறுமையுடன் அவசியம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அதனால் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் பொறுத்தவரையில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கும்பம்

பணப் புழக்கம் அதிகரிப்பதால் சேமிப்பு பெருகும். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் நடக்கும். சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுக்கலாம். குலதெய்வ வழிபாடு குடும்ப மகிழ்ச்சிக்கு வித்திடும். வியாபாரிகளுக்கு பொருத்தவரையில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்

எதிர்பார்த்ததை விட வருமானம் குறைவாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு உங்கள் வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீண்டகாலமாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான கடன் கிடைக்கும்

Most Popular

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...