எந்த ராசிகாரர்களுக்கெல்லாம் காதல் வாழ்க்கை ஏற்றம் தரும்!

 

எந்த ராசிகாரர்களுக்கெல்லாம் காதல் வாழ்க்கை ஏற்றம் தரும்!

25.05.2020(திங்கட்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 மணி முதல் 7.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 7.30 மணி முதல் 9 வரை
எமகண்டம்
காலை 10.30 மணி முதல் 12 வரை

மேஷம்
ஆரோக்கியத்தைப் பொருத்தவரை கவனமாக இருக்கவும். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
ரிஷபம்
நீங்கள் தீர்ப்பு சொல்லும் போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம்
இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது. பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். குடும்பத்தில் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் சிறிது கவலைகள் ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்ட எண்: 4
கடகம்
தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களைத் தரும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். காதல் வாழ்க்கை உங்களுக்கு நிச்சய ஏற்றம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 8
சிம்மம்
விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ரொம்பவும் சோம்பேறி, ஒருபோதும் உங்கலிடம் வராது. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்தி, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும்.
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். இடைவிடாத வேலை நிறைந்த நாளிலும் சக்தியை சேர்த்துக் கொள்ள உங்களால் முடியும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
துலாம்
‘முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். சிறிய குழந்தைகள் உங்களை பிசியாக வைத்து ஆனந்தமாக்குவார்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம்
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். வேலையில் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 9
தனுசு
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள். பெண் நண்பர் உங்களை ஏமாற்றக் கூடும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும்.
அதிர்ஷ்ட எண்: 6
மகரம்
உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும்.
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம்
சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். உணர்ச்சியமான ரிஸ்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும். எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3
மீனம்
மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள்
அதிர்ஷ்ட எண்: 1